தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க உகந்த நேரம் என்ன? அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய முறைகள்!

ஆயுர்வேதத்தின்படி, எண்ணெய் தேய்த்துக் குளிப்பது வாத, பித்த, கப தோஷங்களைச் சமன் செய்கிறது. இது நிண நீரோட்டத்தைச் சீராக்கி, உடலின் கழிவுகளை நீக்க உதவுகிறது. மேலும், வர்மப் புள்ளிகளைத் தூண்டி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

ஆயுர்வேதத்தின்படி, எண்ணெய் தேய்த்துக் குளிப்பது வாத, பித்த, கப தோஷங்களைச் சமன் செய்கிறது. இது நிண நீரோட்டத்தைச் சீராக்கி, உடலின் கழிவுகளை நீக்க உதவுகிறது. மேலும், வர்மப் புள்ளிகளைத் தூண்டி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

author-image
Meenakshi Sundaram S
New Update
oil bath tamilnadu

தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க உகந்த நேரம் என்ன? அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய முறைகள்!

இந்த வருடத்தின் தீபாவளி பண்டிகை அக்டோபர் 20-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபங்கள் ஒளியில் இறைவனை வழிபடும் இந்த திருநாள், இந்துக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். இந்நாளில் சிவபெருமானை வணங்குவது, முழுமையான ஆசிகளைப் பெற்றுத் தரும் என ஜோதிட சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. தீபாவளி பண்டிகையை அதிகாலை 4 மணியில் இருந்து 6 மணிக்குள் கொண்டாடி முடிப்பது வழக்கம். அன்றைய தினம் பிரம்ம முகூர்த்தத்தில் தெய்வங்கள் குறிப்பிட்ட பொருட்களில் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. குறிப்பாக, மகாலட்சுமி எண்ணெயிலும், கங்காதேவி வெந்நீரிலும் வாசம் செய்கிறார்கள். இதனாலேயே தீபாவளி தினத்தன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிக்கும் வழக்கம் உள்ளது. இதை நம் முன்னோர்கள் 'கங்கா ஸ்நானம்' என்றும் வழங்குவர். இதன் மூலம் அனைத்து தெய்வங்களின் ஆசிகளையும் பெற முடியும் என்பதற்காகவே இந்த வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

Advertisment

வாரத்திற்கு 2 நாட்கள் எனப் பாரம்பரியமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்த எண்ணெய் குளியல் வழக்கொழிந்து, தற்போது அழகு நிலையங்களில் 'ஹாட் ஆயில் மசாஜ்' என்ற பெயரில் அதிக விலையுள்ள சிகிச்சையாக மாறிவிட்டது. வெப்ப மண்டலத்தைச் சார்ந்த நம் நாட்டில், உடலில் சேரும் அதிக வெப்பத்தைத் தணிக்க எண்ணெய் குளியல் அவசியமாகிறது.

1. தீபாவளிச் சிறப்பு: கங்கா ஸ்நானம்

தீபாவளி தினத்தன்று அதிகாலை 4 மணி முதல் 5.30 மணிக்குள் நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிப்பது சிறந்தது. நல்லெண்ணெயில் மகாலட்சுமி வாசம் செய்வதால், இந்த 'கங்கா ஸ்நானம்' தெய்வங்களின் ஆசியைப் பெற்று வாழ்வின் அனைத்து நலன்களையும் தரும் என்று நம்பப்படுகிறது.

2. எண்ணெய் குளியல் ஏன் அவசியம்?

ஆயுர்வேதத்தின்படி, வயது மற்றும் பாலினத்தைப் பொருட்படுத்தாமல் அனைவரும் (வயதானவர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் உட்பட) எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும். எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிப்பதால் உடலில் உள்ள வாத, பித்த, கப தோஷங்கள் சரியான அளவில் சமன் செய்யப்படுகின்றன. உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கும் நிண நீரோட்டம் சீரடைகிறது. எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது வர்மப் புள்ளிகள் தூண்டப்படுவதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. எண்ணெய் மசாஜ் மற்றும் குளியல், மகிழ்ச்சிக்கான ஹார்மோன்களைத் தூண்டிவிடுகின்றன.

Advertisment
Advertisements

3. எண்ணெய் குளியல் முறை:

தலை முதல் கால் வரை எள் எண்ணெய் (நல்லெண்ணெய்) தேய்த்து மசாஜ் செய்து குளிக்க வேண்டும். முதலில் தலையில் சிறிது சிறிதாகத் தடவி, பிறகு முகம், கண், மூக்கு, அக்குள், தொப்புள், இடுப்பு என ஒவ்வொரு பகுதியாக எண்ணெய் தடவி மசாஜ் செய்ய வேண்டும். எண்ணெய் தடவிய பிறகு 30 நிமிடங்கள் ஊற வைத்து, வெதுவெதுப்பான வெந்நீரில் குளிப்பதே சிறந்தது. தீபாவளி அன்று மட்டும் சூரிய உதயத்திற்கு முன்பாக குளிக்க வேண்டும். மற்ற நாட்களில் சூரிய உதயத்திற்குப் பிறகு 3 மணி நேரத்திற்குள் குளிப்பதே பொருத்தமான நேரம். குளிப்பதற்கு சீயக்காய் அல்லது நலுங்குமாவைப் பயன்படுத்தலாம்.

4. எண்ணெய் குளியலின்போது கவனிக்க வேண்டியவை:

எண்ணெய் குளியல் செய்த நாளில் குளிர்ந்த உணவுகளைத் தவிர்த்து, எளிமையான உணவுகளை உட்கொள்ள வேண்டும். பகல் தூக்கத்தைத் தவிர்க்க வேண்டும். எண்ணெய் குளியல் எடுக்கும் நாட்களில் அசைவ உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் எண்ணெய் குளியலால் உடல் குளிர்ச்சியடையும்போது, அசைவ உணவு செரிமானத்தைத் தாமதப்படுத்தி ஆரோக்கியக் கோளாறுகளை உண்டாக்கலாம்.

5. எண்ணெய் குளியலின் நன்மைகள்:

மனம் மற்றும் உடல் அழுத்தத்தைக் குறைக்கும். சரும நிறம் மற்றும் அமைப்பை மேம்படுத்தி, சருமத்தை ஈரப்பதமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், முடி வளர்ச்சிக்கும் உதவும். கண் பார்வையை கூர்மைப்படுத்துவதற்கும், நரம்புகளுக்கும் நல்லது. பதற்றமான தசைகளை அமைதிப்படுத்தி நல்ல உறக்கத்தை வழங்குகிறது. ஒற்றை தலைவலி, மனச்சோர்வு, வயிற்றுக் கோளாறு போன்றவற்றிற்கு இது சிறந்த சிகிச்சையாக அமைகிறது.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: