ஒரு முறை கல்யாணம்... மூன்று முறை ரிசப்ஷன்... அனைவரின் கவனத்தையும் திருப்பும் தீபிகா - ரன்வீர்

Deepika and Ranveer Singh Reception : இத்தாலியில் 15ம் தேதி திருமணம் முடித்து சொந்த ஊருக்கு திரும்பிய தீபிகா – ரன்வீர் இருவரின் கல்யாண ரிசப்ஷன் பெங்களூரூவில் நேற்று நடைபெற்றது.

deepveer wedding photos, தீபிகா - ரன்வீர்

ரன்வீர் குடும்ப வழக்கத்தின்படி சிந்தி முறையிலும், தீபிகா குடும்ப முறைப்படி கொங்கனி திருமணமும் இத்தாலியின் நடைபெற்றது. சமீபத்தில் நடந்த விராட் கோலி – அனுஷ்கா திருமணம் போலவே இவர்களின் திருமணமும் இத்தாலியில் நடைபெற்றது. காதலின் சின்னமாக இத்தாலி கருதப்படுவதே இதன் காரணம்.

தீபிவீர் கல்யாணம் ஆல்பம் வெளியானது… வாவ் சொல்ல வைத்த ஃபோட்டோஸ்

திருமணம் முடிந்து இருவரும் சொந்த ஊருக்கு திரும்பினார்கள். இருவரும் புக் செய்துள்ள ஒரு கோடி ரூபாய் வீடு தற்போது கட்டுமான பணியில் இருப்பதால், இப்போது மும்பையில் இருக்கும் ரன்வீர் இல்லத்திலேயே தங்கியுள்ளனர். மேலும் தீபிகாவின் பூர்வீக ஊரான பெங்களூரூவில் ரிசப்ஷன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், இருவரும் ஒன்றாக நேற்று முன் தினம் கிளம்பி சென்றனர்.

Deepika and Ranveer Singh Reception : தீபிகா – ரன்வீர் வரவேற்பு விழா

இவர்கள் திருமண வரவேற்பு நிகழ்வு நேற்று பெங்களூரூவில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் நடந்தது. திருமணத்திற்கு சிவப்பு ஆடை அணிந்திருந்தது போலவே, ரிசப்ஷன் ஆடையும் சிம்பிள் ஆனால் பிரம்மாண்டம் என்று சொல்வது போல் இருந்தது. கருநீல நிறத்தில் ரன்வீர் ஷேர்வானி அணிர்ந்தும், வெள்ளை பிளவுஸ் தங்க நிற புடவையில், மயில் நிற கல் பதித்த நகைகளை அணிந்தும் இருந்தார் தீபிகா.

Deepika padukone - ranveer singh wedding reception, தீபிகா - ரன்வீர்

இவர்களின் நேற்றைய ரிசப்ஷன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தனர். ஆனால் இதோடு இந்த ரிசப்சன் முடியவில்லை. ஒரு முறை திருமணம் செய்து ஒரு முறை ரிசப்ஷன் என்ற வழக்கத்தையே மாற்றியமைத்திருக்கிறார்கள் இந்த ஜோடி.

Deepika padukone - ranveer singh wedding reception, தீபிகா - ரன்வீர்

நேற்று நடந்தது பெங்களூரூ ரிசப்ஷன். அடுத்ததாக மும்பையில் ரிசப்ஷன் நடக்க உள்ளது. அதுவும் 3 முறை. நவம்பர் 24, நவம்பர் 28 மற்றும் டிசம்பர் 1ம் தேதி என மூன்று நாட்கள் ரிசப்ஷன் நடக்க உள்ளது. இதில் டிசம்பர் 1ம் தேதி ரிசப்ஷன் தான் பாலிவுட் உலகமே பங்கேற்க இருக்கும் நிகழ்வு. அதற்கு முன் நடக்க இருக்கும் 2 நாட்களும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சிறப்பு விருந்தாளிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ரிசப்ஷன் அது.

Deepika padukone - ranveer singh wedding reception, தீபிகா - ரன்வீர்

நேற்று நடந்த ரிசப்ஷனில் என்னென்ன உணவுகள் தெரியுமா? இளநீர் மற்றும் எலுமிச்சை ஜூஸ் கொடுத்து தொடங்கிய வரவேற்பு, வியட்நாம், இத்தாலியன், சைனீஸ், தாய் மற்றும் தென் இந்திய உணவு வகைகளுடன் நிறைவடைந்துள்ளது. அடுத்தடுத்து வரும் 3 ரிசப்ஷனில் என்னென்ன மெனு என்று வெயிட் பண்ணி பார்ப்போம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close