/indian-express-tamil/media/media_files/IrGtFvR2X9KVhfc9Q94L.jpg)
Deepika Padukone
கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இது நிச்சயமாக மகிழ்ச்சியான தருணங்களைக் கொண்டுவரும் அதே வேளையில், இது பெரும்பாலும் ஒரு சில சிக்கல்களுடன் சேர்ந்து, ஒரு தாய்க்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்.
ஒவ்வொரு கர்ப்பமும் தனித்துவமானது, தாய் மற்றும் குழந்தைக்கு சிறந்த பராமரிப்பை உறுதி செய்வதற்காக, சுகாதார நிபுணரிடம் உங்கள் பிரச்னைகளை தெரிவிக்க வேண்டியது அவசியம் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
பாலிவுட்டின் நட்சத்திர தம்பதி தீபிகா படுகோனே - ரன்வீர் இருவரும் தாங்கள் பெற்றோர் ஆகப் போகும் செய்தியை கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தனர். செப்டம்பர் மாதம் இந்த ஜோடிக்கு குழந்தை பிறக்க இருக்கிறது.
தீபிகா தன்னுடைய கர்ப்பகால பயணத்தை தொடர்ச்சியாக சோஷியல் மீடியாவில் பதிவு செய்து வருகிறார்.
சமீபத்தில் தீபிகா, தரையில் படுத்து கொண்டு விப்ரித் கர்னி ஆசனம் செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
தூங்குவதற்கு முன் விப்ரித் கர்னி ஆசனம் செய்தால், அது உடல் மற்றும் மனதைத் தளர்த்துவதற்கு உதவியாக இருக்கும், இதன் விளைவாக நல்ல தூக்கம் கிடைக்கும்.
இந்த ஆசனம் கால் மற்றும் பாதங்களில் வலியை போக்கவும், நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவும், மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்கவும், கால்கள், பாதங்கள் மற்றும் இடுப்புகளில் இருந்து அழுத்தம் அல்லது சோர்வைப் போக்கவும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும்.
தினமும் இதை செய்தால், அது மன அழுத்தத்தைக் குறைக்கவும், ரத்த சுழற்சியை மேம்படுத்தவும், கீழ் முதுகுவலியைக் குறைக்கவும் உதவும்.
போஸில் இருக்கும்போது உங்கள் சுவாசத்தை மெதுவாகவும் சீராகவும் வைத்திருங்கள், மேலும் உங்கள் மூச்சைப் பிடித்துக் கொள்வதைத் தவிர்க்கவும்.
மாதவிடாய் அல்லது கர்ப்ப காலத்தில் முதலில் உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்காமல் இந்த ஆசனத்தை பயிற்சி செய்யாதீர்கள்.
இந்த போஸைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் அல்லது கேள்விகள் இருந்தால், அதை நீங்கள் முயற்சிக்கும் முன், தகுதிவாய்ந்த யோகா ஆசிரியரிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறுவது எப்போதும் சிறந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us