Advertisment

கர்ப்பம் தொடர்பான முதுகு வலிக்கு நிவாரணம்: தினமும் 5 நிமிடம் இந்த ஆசனம் பண்ணுங்க

சமீபத்தில் தீபிகா, தரையில் படுத்து கொண்டு விப்ரித் கர்னி ஆசனம் செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Deepika Padukone

Deepika Padukone

கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இது நிச்சயமாக மகிழ்ச்சியான தருணங்களைக் கொண்டுவரும் அதே வேளையில், இது பெரும்பாலும் ஒரு சில சிக்கல்களுடன் சேர்ந்து, தாய்க்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்.

Advertisment

ஒவ்வொரு கர்ப்பமும் தனித்துவமானது, தாய் மற்றும் குழந்தைக்கு சிறந்த பராமரிப்பை உறுதி செய்வதற்காக, சுகாதார நிபுணரிடம் உங்கள் பிரச்னைகளை தெரிவிக்க வேண்டியது அவசியம் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

பாலிவுட்டின் நட்சத்திர தம்பதி தீபிகா படுகோனே, ரன்வீர் இருவரும் தாங்கள் பெற்றோர் ஆகப் போகும் செய்தியை கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தனர். செப்டம்பர் மாதம் இந்த ஜோடிக்கு குழந்தை பிறக்க இருக்கிறது.

தீபிகா தன்னுடைய கர்ப்பகால பயணத்தை தொடர்ச்சியாக சோஷியல் மீடியாவில் பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் தீபிகா, தரையில் படுத்து கொண்டு விப்ரித் கர்னி ஆசனம் செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்தார்.

என்னால் வொர்க்அவுட் செய்ய முடியாதபோது, ​​இந்த 5 நிமிட எளிய வழக்கத்தை நான் பயிற்சி செய்கிறேன். நான் வொர்க்அவுட் செய்தாலும் இல்லாவிட்டாலும் தினமும் இதைச் செய்கிறேன். ஒரு நீண்ட விமானத்திற்குப் பிறகு அல்லது டிகம்ப்ரஸ் செய்வதற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

இந்த போஸ் கால்கள், கணுக்கால் வீக்கத்தை குறைக்கிறது, கீழ் முதுகில் அழுத்தத்தை நீக்குகிறது, கர்ப்பம் தொடர்பான முதுகுவலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. கர்ப்ப காலத்தில் வழக்கமான இந்த பயிற்சி ஒட்டுமொத்த தளர்வை ஊக்குவிக்கிறது. உடல் மற்றும் மன நலனை ஆதரிக்கிறது.

இருப்பினும், கர்ப்பிணிப் பெண்கள் விப்ரித் கர்னி ஆசனத்தை சில முன்னெச்சரிக்கைகளுடன் பயிற்சி செய்ய வேண்டும், குறிப்பாக கர்ப்பத்தின் பிற்பகுதியில்..

அவர்கள் கீழ் முதுகில் சிரமத்தைத் தவிர்க்க இடுப்புக்கு கீழ் தலையணை அல்லது மடிந்த போர்வைகளை பயன்படுத்தலாம்.

அடிவயிற்றில் எந்த அழுத்தத்தையும் தவிர்க்கவும், சுவாசம் தடையின்றி இருப்பதை உறுதிப்படுத்தவும் அவசியம். கர்ப்பத்தின் 3வது ட்ரிமஸ்டரில் உள்ள பெண்கள், அதிக நேரம் இந்த நிலையில் இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும், என்று டாக்டர் ஹன்சாஜி யோகேந்திரா கூறினார். (director of The Yoga Institute)

எவ்வளவு நேரம் பயிற்சி செய்யலாம்?

கர்ப்பிணிகள் விப்ரீத்ர்னி ஆசனத்தை தினமும் பயிற்சி செய்து அதன் பலன்களை அனுபவிக்கலாம். மென்மையான அமர்வுகளுடன் தொடங்கவும், 5 நிமிடங்களுக்கு மேல் இல்லாமல் போஸ் வைத்திருக்கவும். இது சுழற்சியை ஊக்குவிக்கிறது, வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் கீழ் முதுகு மற்றும் கால்களில் அழுத்தத்தைக் குறைக்கிறது.

இருப்பினும், எப்போதும் உங்கள் உடலை கவனித்து, அசௌகரியம் அல்லது சிரமத்தைத் தவிர்க்கவும். சுகாதார நிபுணருடன் கலந்தாலோசிப்பதன் மூலம், தனிப்பட்ட தேவைகள் மற்றும் கர்ப்பகால நிலை ஆகியவற்றின் அடிப்படையில் பொருத்தமான ஆலோசனைகளை வழங்க முடியும், என்கிறார் என்று டாக்டர் ஹன்சாஜி யோகேந்திரா

Read in English: Mom-to-be Deepika Padukone posts picture doing the Viparita Karani asana: ‘I don’t work out to look good’

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment