New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/09/Rsd.jpg)
Deepika Padukone PV Sindhu Ranveer Singh Latest Viral Photos Fashion Tamil News
Deepika Padukone PV Sindhu Ranveer Singh Latest Viral Photos Fashion Tamil News
Deepika Padukone PV Sindhu Ranveer Singh Latest Viral Photos Fashion Tamil News : சமீபத்தில் டோக்கியோவில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தார். இதனைத் தொடர்ந்து பிசியாக இருக்கும் அவர், பாலிவுட்டின் அசத்தல் அசல் ஜோடியான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங்குடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
தனது அசாத்திய நடிப்பால் அனைவரின் இதயத்தையும் கவர்ந்தவர் தீபிகா படுகோன். படத்திற்குப் படம் வித்தியாச கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, உலகளவில் ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருக்கிறார். நடிப்பிற்கு மட்டுமல்ல, அவர் உடுத்தும் உடைகளுக்கும் அதனை அவர் ஏந்திக்கொள்ளும் விதத்திற்கும் கூட ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வரிசையில் எளிமையான கேஷுவல் உடை உங்கள் சாய்ஸ் என்றால், நிச்சயம் அவர் உடுத்தியிருக்கும் இந்த உடையை நீங்கள் தேர்வு செய்யலாம். அதிகப்படியான வேலைப்பாடுகள் எதுவுமில்லாமல், சிம்பிளான வெள்ளை மற்றும் கருப்பு நிற சாட்டின் மெட்டிரியலில் பலூன் ஸ்லீவ் வைத்த இந்த உடை நிச்சயம் நீங்க முயற்சி செய்து பார்க்கவேண்டிய உடை.
இந்த அழகிய வெஸ்டர்ன் உடைக்கு மேட்சாக ஸ்லிங் பேக் மற்றும் டாங்லர் காதணியை அணிந்திருந்தார். இவ்வளவு அழகான ஆடை அணிந்து அவர் பார்க்கச் சென்ற நபர், சர்வதேச விளையாட்டு வீரர் பி.வி சிந்து. ஐவரும் தீபிகாவிற்கு கொஞ்சமும் குறைவில்லாமல், எளிமையான வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து மிளிர்ந்தார். தன் உடைக்கு மேட்சாக காதணிகள், மோதிரம் மற்றும் காலனி அணிந்து அனைவரின் பார்வையையும் ஈர்த்தார் சிந்து. எப்போதும் விளையாட்டு சீருடையில் பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு சிந்துவின் இந்த தோற்றம் நிச்சயம் பிடித்திருக்கும்.
இவர்கள் இருவருக்கும் மிகவும் டஃப் கொடுக்கும் வகையில், தீபிகாவின் கணவர் ரன்வீர் சிங் தனக்கே உரித்தான ஸ்டைலில் தோன்றினார். அவருடைய நிறத்தேர்வும் வெள்ளைதான். ஆனால், ஏராளமான ட்விஸ்டுகளுடன் அவருடைய உடை இருந்தது. கடல் சார்ந்த உருவங்கள் ப்ரின்ட் செய்யப்பட்ட வெள்ளை நிற சாட்டின் சட்டை அணிந்து அதற்கு மேட்சாக ட்ரெண்டி நீல நிற ஜீன்ஸ் மற்றும் கூர்மையான பழுப்பு நிற வெல்வெட் பூட்ஸ் அணிந்திருந்தார்.
கூடவே ஒரு லாக்கெட், வாட்ச் மற்றும் அரை போனிடெயிலுடன் வித்தியாசமான கெட்-அப்பில் அனைவரையும் கவர்ந்தார். இந்த சந்திப்பில் எடுக்கப்பட்ட இவர்களின் புகைப்படங்கள், மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.