தீபிகா படுகோனை தொடர்ந்து தற்போது ஆலியா பட் கருப்பு நிற சப்யசாச்சி புடவையை அணிந்துள்ளார்.
’போட்சர்’ ( pocher) என்ற சீரிஸ் அமேசானில் வெளியாக உள்ளது. வரும் பிப்ரவரி 23ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் அவர் இந்த புடவையை அணிந்துள்ளார்.
கருப்பு வெல்வெட்டால் ஆல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகச்சிறந்த ஆடை வடிவமைப்பாளர் சப்யசச்சி முகர்ஜி என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இந்த புடவையின் ஓரவங்களில் கோல்டன் நிற வேலைபாடுகள் உள்ளது. முந்தானையில் கோல்டன் நிற பூக்கள் வேலைபாடுகள் உள்ளது.
இந்த புடவடைக்கு ஏற்றவாறு முத்துக்களால் ஆனா மாலை மற்றும் முத்துக்களால் ஆன கம்மல் உள்ளது. மேலும் இவர் ரெட் லிஸ்டிக் பயன்படுத்தி உள்ளார். முடியை முழுவதுமாக கட்டி கொண்டை போட்டுள்ளார்.
இந்நிலையில் இதுபோன்று தீபிகா படுகோன் ஒரு கருப்பு நிற சேலையை அணிந்திருந்தார். அதற்கு ஏற்றவாறு முழு கை நீள பிளவுஸை பயன்படுத்தி உள்ளார். கண்களுக்கு அதிக காஜேல் உள்ள மேக் ஆப். மற்றும் முத்துகள் கோல்டன் கம்மலை அணிந்துள்ளார். இந்நிலையில் இருவரும் தனித்துவமாக ஆடையை அணிந்துள்ளனர்.
Read in english