நீரேற்றமாக இருக்க தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மக்கள் சொல்வதை நீங்கள் அடிக்கடி கேட்டிருப்பீர்கள். இருப்பினும், அதன் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தபோதிலும், தண்ணீர் சிறந்த ஹைட்ரேட்டர் அல்ல.
பிரபல ஊட்டச்சத்து நிபுணரான டாக்டர் சித்தார்த் பார்கவா, தண்ணீர் மனிதனுக்குத் தெரிந்த ஆரோக்கியமான பானம் ஆனால் அது தாகத்தைத் தணிக்க சிறந்தது அல்ல என்று கூறினார். அதற்கு பதிலாக, நீரிழப்பு ஏற்பட்டால் ஒரு கிளாஸ் பால், ORS அல்லது ஆரஞ்சு சாறு ஆகியவற்றைத் தேர்வு செய்ய அவர் பரிந்துரைத்தார்!
ஹைட்ரேஷன் என்பது தண்ணீர் பற்றியது அல்ல, தண்ணீரைத் தேக்கி வைப்பது. ஹைட்ரேஷன் இன்டெக்ஸ் என்று அழைக்கப்படும் ஒரு குறியீடு உள்ளது, இது வெவ்வேறு திரவங்கள் நம் உடலில் நீண்ட காலம் தங்கும் திறனை ஒப்பிடுகிறது.
முடிவுகள் உண்மையிலேயே ஆச்சரியமானவை. தாகத்தைத் தணிக்கும் நீர் இந்த பட்டியலில் நீங்கள் எதிர்பார்ப்பதை விட மிகவும் குறைவாக உள்ளது. பால், ஓஆர்எஸ், ஆரஞ்சு ஜூஸ், தேங்காய் தண்ணீர் என அனைத்தும் தண்ணீரை விட அதிக ஹைட்ரேஷன் இன்டெக்ஸ் கொண்டுள்ளன என்று கூறிய அவர், பால் தாகத்தைத் தணிக்க சிறந்தது என்ற உண்மையை வலியுறுத்தினார்.
டாக்டர் பார்கவா மேலும் கூறுகையில் நிச்சயமாக, நிறைய தண்ணீர் குடித்துக்கொண்டே இருங்கள், ஆனால் சில சூழ்நிலைகளில், தண்ணீரை விட சிறந்தது எது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
டாக்டர் ஸ்மிருதி ஜுன்ஜுன்வாலா கூறுகையில், நீரிழப்பு என்பது வெறுமனே நீர் இழப்பைக் குறிக்கவில்லை, ஆனால் எலக்ட்ரோலைட்டுகளின் இழப்பு, மாறுபட்ட உடல் வெப்பநிலை, சிறுநீரின் செறிவு, பலவீனம் மற்றும் பல அறிகுறிகள் உள்ளன. தண்ணீரை குடிப்பது மட்டுமே இந்த இழப்புகளை சரி செய்யாது, எனவே அதிக ஹைட்ரேஷன் இன்டெக்ஸ் கொண்ட பானங்கள் நீரிழப்பு நிகழ்வுகளில் மிகவும் திறமையானதாகக் கருதப்படுகிறது.
திரவ பானங்கள் மட்டுமல்ல, நீங்கள் உண்ணும் உணவுகளும் நீரேற்றத்துடன் இருக்க உதவும். முலாம்பழம், தக்காளி, ஊறவைத்த பீன்ஸ் போன்ற அதிக அளவு நீர் உள்ள உணவுகளை உண்பதன் மூலமும் ஒரு மனித உடலால் நீர் சமநிலையை மீட்டெடுக்க முடியும்.
சமைத்தவற்றைக் காட்டிலும் அனைத்து பழங்கள் மற்றும் காய்கறிகளிலும் அதிக தண்ணீர் உள்ளது. சாதாரண நீருடன் ஒப்பிடும்போது ஒரு முழுப் பழமும் உங்கள் உடலில் நீரை அதிக நேரம் வைத்திருக்கும், என்றார் அவர்.
தண்ணீரின் சில நன்மைகள்
தண்ணீர் சிறந்த தாகத்தைத் தணிப்பதாக இல்லாவிட்டாலும், அது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. அதன் பல நன்மைகளில் சிலவற்றை டாக்டர் ஜுன்ஜுன்வாலா கூறினார். அவை
– உண்ணும் உணவை உறிஞ்சுவதற்கு தண்ணீர் உதவுகிறது.
– நீர் இரத்தத்தை உருவாக்கவும், ஊட்டச்சத்துக்களை இரத்தத்தின் வழியாக கொண்டு செல்லவும் உதவுகிறது
– இரத்த அழுத்தம் மற்றும் இரத்த அளவைக் கட்டுப்படுத்துவதில்,
– உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும் தண்ணீர் உதவுகிறது.
– மலம் மற்றும் பிறவற்றை மென்மையாக்க
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“