சூடான வெயிலுக்கு, குளுமையான டிரிங்க். செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
1 கப் தண்ணீர்
அரை கப் ஜவ்வரிசி
அரை கப் சேமியா
அரை லிட்டர் பால்
கால் கப் பீட்ரூட் சாறு
4 டேபிள் ஸ்பூன் மில்க் மேட்
கால் டீஸ்பூன் ரோஸ் யெசன்ஸ்
கான்பிளவர் 3 ஸ்பூன்
கால் கப் பீட்ரூட் சாறு
தண்ணீர் பூசணி அரை கப்
பாதம்- பிஸ்தா துருவியது கால் கப்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து, ஜவ்வரிசியை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். தொடர்ந்து சேமியாவை தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துகொள்ளவும். ஜவ்வரிசியை ப்ரிஜில் வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து, அதில் பீட்ரூட் சாறு சேர்த்து, மில்க் மேட், ரோஸ் எசன்ஸ், கான்பிளவர் தண்ணீரில் கரைத்து சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசி, சேமியா சேர்த்து, மீண்டும் பீட்ரூட் சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். பாலை சேர்த்து கொள்ளவும். தண்ணீர் பூசணி சேர்த்து கிளரவும். பாதம்- பிஸ்தா துருவியதை சேர்த்து கிளரவும்.