Advertisment

விஷமாக மாறிய டெல்லி காற்று: உங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி?

டெல்லியில் காற்று மாசுபாட்டிலிருந்து முற்றிலும் பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம், காற்று தூய்மைப்படுத்தும் சாதனம் உள்ளிட்டவை மட்டும் போதாது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
air pollution, food habit, respiratory problems, heart disease

டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. எந்த அளவுக்கென்றால், காற்று மாசுபாட்டிலிருந்து குழந்தைகளை காக்க பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவுக்கு. வீட்டுக்குள் இருந்தால் மட்டும் காற்று மாசுபாடு உங்களை தாக்காதா? டெல்லியில் காற்று மாசுபாட்டிலிருந்து முற்றிலும் பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம், காற்று தூய்மைப்படுத்தும் சாதனம் உள்ளிட்டவை மட்டும் போதாது.

Advertisment

அதனால், காற்று மாசுபாட்டிலிருந்து ஓரளவு தப்பிக்க சில வழிமுறைகளை கூறுகின்றனர் நிபுணர்கள்.

1. எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும்?

காலை நேரங்களில் நடைபயிற்சி, ஜாக்கிங் உள்ளிட்டவற்றை தவிர்த்தல் நல்லது. ஏனெனில், நம் உடலுக்கு அதிக உழைப்பை தரக்கூடிய பயிற்சிகளை மேற்கொள்ளும்போது, அதிகளவில் வேகமாக காற்றை சுவாசிக்க வேண்டும். இதனால், காற்றில் உள்ள நச்சுகள் நம் உடலுக்குள் செல்வதற்கு அதிகளவில் வாய்ப்புகள் உண்டு. இதனால், குழந்தைகள், பெரியவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. மேலாக, மாலையில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகளை ஓரளவு தவிர்க்க வேண்டும். அதேபோல், திறந்தவெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும். எண்ணெயில் பொரித்தெடுத்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவு வகைகளையும் தவித்தல் நல்லது.

publive-image

2. மூச்சுத்திணறல் சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு:

முறையாக உங்கள் மருத்துவரிடம் ஆலோசனைகளை பெற்று மருந்துகளை எப்போதும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள். திடீரென அதிகளவு காற்றில் மாசு அதிகரித்துள்ளதால், ஆஸ்துமாவின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, மூச்சு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இல்லாதவர்களும், இந்த காற்று மாசுபாட்டால் மூச்சுத்திணறலை எதிர்கொள்வதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

3. மூச்சு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே மருத்துவம்:

கூடுமான வரையில் இத்தகைய பிரச்சனை உள்ளவர்கள் வீட்டுக்குள்ளேயே இருத்தல் நல்லது. காற்று மாசுபாட்டால் ஏற்பட்டுள்ள புகையானது, தொண்டை எரிச்சலை உண்டாக்கவல்லது. தினந்தோறும் யூகலிப்டஸ் எண்ணெயை எடுத்துக்கொள்ளுதல் நல்லது. வேம்பு, துளசி உள்ளிட்டவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்.

எப்போதும் முகக்கவசம் அணிந்திருங்கள்:

வெளியே செல்லும்போது எப்போதும் முகக்கவசம் அணிந்திருங்கள். கண்கள், மூக்கு, வாய், காதுகள் ஆகியவை முழுவதும் மூடியிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

publive-image

4. என்னென்ன சாப்பிடலாம்?

விட்டமின் சி அடங்கியுள்ள காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ளலாம். எலுமிச்சை பழம், தர்பூசணி, திராட்சை, உள்ளிட்ட பழங்களை உட்கொள்ளுங்கள். பட்டாணி, காலிஃபிளவர், முட்டைகோஸ், ஓக்ரா, சிகப்பு குடை மிளகாய், ப்ரக்கோலி ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இதய நோய்கள்:

நுரையீரல், தொண்டை உள்ளிட்டவை மட்டுமல்லாமல், காற்று மாசுபாட்டால் இதய நோய்களும் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால், இதய நோய்கள் உள்ளவர்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுதல் நல்லது.

Air Pollution
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment