கொம்புச்சா நீண்ட காலமாக, சுமார் 2,000 ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. முதன்முறையாக சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட, இந்த புளிக்க வைக்கப்பட்ட பானம், பாரம்பரியமாக கருப்பு தேநீர், ஈஸ்ட், சர்க்கரை மற்றும் தண்ணீர் கொண்டு தயாரிக்கப்பட்டது.
நீங்களும் எந்த உதவியும் இல்லாமல் சில எளிய பொருட்களைக் கொண்டு, இந்த ஆரோக்கியமான பானத்தை வீட்டிலேயே செய்யலாம்.
ஃபிட்னஸ் பயிற்சியாளர் நிதி குப்தா இன்ஸ்டாகிராமில் புளித்த கஞ்சி அல்லது “இந்தியன் கொம்புச்சா” செய்முறையை பதிவிட்டுள்ளார். தயாரானதும், நீங்கள் அதை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்து, ஒவ்வொரு நாளும் ஒரு கிளாஸ் குடிக்கலாம். செய்முறையை இங்கே பாருங்கள்:
தேவையான பொருட்கள் மற்றும் செய்யும் முறை
ஒரு பெரிய கண்ணாடி கூஜாவில், இரண்டு பெரிய பீட்ரூட் கிழங்கை எடுத்துக் கொள்ளுங்கள்
அத்துடன் உப்பு, சிவப்பு மிளகாய் தூள், பொடித்த கடுகு மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.
5-6 நாட்கள் வெயிலில் வைக்கவும்.
சுத்தமான, உலர்ந்த கரண்டியால் ஒவ்வொரு நாளும் ஒரு முறை கிளறவும்.
புளிக்கவைத்த பிறகு, அதை குளிர்சாதன பெட்டியில் சேமித்து, தினமும் ஒரு சிறிய கிளாஸ் சாப்பிடுங்கள்.
சமீப காலங்களில், புரோபயாடிக் பானத்தில் குடலைச் சுத்தப்படுத்தும் பண்புகளுடன், ஆன்டி ஆக்ஸிடன்ட்களுடன் சேர்ந்து இருப்பதால் கொம்புச்சா, தனக்கென தனி ரசிகர்களை கொண்டுள்ளது. நிதி-ன் ரெசிபியில், ஃபைபர், ஆன்டி ஆக்ஸிடன்ட், வைட்டமின்கள் கே, சி, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம்" ஆகியவை உள்ளன.
குறிப்பாக குளிர்கால மாதங்களில் சந்தையில் கிடைக்கும் சிவப்பு நிற கேரட்டிலும் இதை செய்முறையை செய்யலாம் என்று உடற்பயிற்சி பயிற்சியாளர் கூறினார்.
கஞ்சியை, கொம்புச்சாவின் இந்தியப் பதிப்பு என்றும் கூறலாம், ஏனெனில் இது ஒரு சிறிய மதுபான சுவை கொண்டது. முக்கியமாக வட மற்றும் மத்திய இந்தியாவில் ஹோலி பண்டிகையின் போது இது தயாரிக்கப்படுகிறது. பாரம்பரியமாக, இது கருப்பு அல்லது சிவப்பு கேரட், பீட்ரூட், கடுகு மற்றும் பெருங்காயம் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
நீங்களும் இந்த சூப்பரான ரெசிபியை செய்து பார்க்க விரும்புகிறீர்களா?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.