பொதுவாக, பல்லில் வலி அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை ஏற்படும்போதுதான் பல் துலக்குவது, வாய்க் கொப்பளிப்பது, ஆயில் புல்லிங் செய்வது எனப் பலரும் செய்கிறோம். ஆனால், டாக்டர் ஷர்மிகா இதை மாற்றியமைக்க வேண்டும் என்கிறார். பலர், பல் துலக்குவதற்கு பேஸ்ட்டை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இது பற்களுக்கு நல்லதல்ல. அதேபோல், மவுத் வாஷ், மவுத் ஃப்ரெஷ்னர் போன்ற ரசாயனம் கலந்த பொருட்களையும் நாம் தவிர்க்க வேண்டும்.
Advertisment
"நாம் வாழும் கடைசி நிமிடம் வரை சாப்பிட்டுக்கொண்டுதான் இருப்போம். அப்படிப்பட்ட உணவை உண்பதற்கு ஆரோக்கியமான பற்கள் மிகவும் அவசியம். அதனால்தான், பற்களைப் பேணுவது மிகவும் முக்கியம். 40-50 வயதிற்கு மேல் ஏற்படும் பல் சொத்தை, ஈறு வீக்கம், ரூட் கேனல் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க, கீழ்க்கண்ட 4 விஷயங்களைப் பின்பற்ற வேண்டும்" என்று டாக்டர் ஷர்மிகா வலியுறுத்துகிறார்.
பல் ஆரோக்கியத்திற்கான 4 முக்கிய குறிப்புகள்
Advertisment
Advertisements
பல் துலக்குதல்: தினமும் இரண்டு முறை பல் துலக்குவது அவசியம். காலையில் எழுந்தவுடன் ஒருமுறையும், இரவு தூங்குவதற்கு முன் ஒருமுறையும் பல் துலக்க வேண்டும். பற்பசையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, மரத்தூள், வேப்பம் குச்சி, ஆலம் குச்சி, அல்லது வீட்டிலேயே தயாரித்த பல் பொடியைப் பயன்படுத்தலாம்.
ஆயில் புல்லிங்: தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெயைக் கொண்டு ஆயில் புல்லிங் செய்வது நல்லது. இது வாய் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
வாய் கொப்பளித்தல்: ஒவ்வொருமுறை உணவு சாப்பிட்ட பின்னரும், வாய் கொப்பளிப்பதை ஒரு பழக்கமாகக் கொள்ள வேண்டும். இதனால், உணவுத் துகள்கள் வாயில் தங்குவதைத் தவிர்க்கலாம்.
நாக்கைச் சுத்தம் செய்தல்: பல் துலக்கும்போதெல்லாம், நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும்.
ஒரு பிரச்சனை ஏற்படும் வரை காத்திருக்க வேண்டாம். நாளைக்கே இந்தப் பழக்கங்களைத் தொடங்கலாமே!