நீங்கள் பல் துலக்கிய பிறகு வாய் கொப்பளிப்பது உங்கள் பற்களுக்கு எந்த நன்மையும் செய்யாது என்று சொன்னால் என்ன செய்வீர்கள்? ஆம் இந்த வாய் கொப்பளிக்கும் பழக்கம் நீங்கள் அடைய விரும்பும் பலன்களையும் சேர்த்து கழுவிவிடும்.
“ஒரு பல் மருத்துவராக நாங்கள் பல் துலக்கிய பிறகு வாய் கொப்பளிக்க வேண்டாம் என்று சொல்கிறோம். ஆம், அது கடினம் என்று எனக்குத் தெரியும்”, என்று பல் மருத்துவர் சாரா அல்ஹம்மதி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவில் கூறினார்.
டாக்டர் நியாதி அரோரா (MDS (prosthodontist) at Krown Hub Dental Clinic, Pitampura) கூறுகையில், இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன.
பல் துலக்கிய உடனேயே கழுவ வேண்டும் என்பது சாதாரண மனநிலை. அதிக அளவு ஃவுளூரைடை விழுங்கக் கூடாது என்பதால் நாம் அவ்வாறு செய்கிறோம்.
பொதுவாக தினசரி பரிந்துரைக்கப்படுவதை விட அதிகளவு ஃவுளூரைடு அளவைக் கொண்ட சில டென்டல் பிரொடக்ட்ஸ் உள்ளன. பல் துலக்கிய பிறகு உங்கள் வாயை தண்ணீரில் கொப்பளிக்க வேண்டுமா என்பதில் ஒருமித்த கருத்து இல்லை, ஆனால் கழுவாமல் இருப்பது பல் சொத்தைக்கு ஆளாகக்கூடியவர்களுக்கு பயனளிக்கும்.
எனவே பல் துலக்கிய பிறகு துப்புங்கள், கொப்பளிக்க வேண்டாம்.
இது எப்படி நன்மை பயக்கும்?
பல் துலக்கிய பிறகு பேஸ்ட்டை அப்படியே பற்களில் விட்டுவிடுவது, இதை நீங்கள் தொடர்ந்து செய்யும் போது நமது பல் ஆரோக்கியத்திற்கு உதவும்.
ஃவுளூரைடு பேஸ்டில், நமது பற்களில் ஃவுளூரைடு நீண்ட நேரம் செயல்படுவதால், பல் சிதைவைத் தடுக்கும். சென்சிட்டிவ் டூத்பேஸ்ட் விஷயத்தில், அதில் உள்ள அயனிகள் (ions) ட்யூபிள்ஸை (tubules) நன்றாக அடைக்க உதவும், இது சென்சிட்டிவை வேகமாக குறைக்க உதவுகிறது, என்று டாக்டர் அரோரா கூறினார்.
NHS UK இன் கூற்றுப்படி, பல் துலக்கிய பிறகு துப்ப மட்டுமே வேண்டும். கொப்பளிப்பது, மீதமுள்ள டூத்பேஸ்டில் உள்ள ஃவுளூரைடையும் சேர்த்து கழுவிவிடும். இது அதன் விளைவுகளை குறைக்கிறது. இதனால் ஈறுகள் மற்றும் பற்கள் எளிதில் பாதிக்கப்படும்.
பல் துலக்கிய பின் உடனடியாக கழுவுவது உங்கள் வாய் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பதற்கு போதுமான சான்றுகள் உள்ளன.
வாய் கொப்பளிக்கமால் பல் துலக்கும்போது, டூத் பேஸ்டின் ஃவுளூரைடு நீண்ட நேரம் தங்கி, சிதைவு மற்றும் சென்சிட்டிவ் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது. இது நுண்ணுயிரிகளுக்கு எதிராக பாதுகாப்பதன் மூலம் ஈறு நோய் நிகழ்வுகளில் ஈறு ஆரோக்கியத்தை ஆதரிக்கும், என்று டாக்டர் அரோரா கூறினார்.
Read in English: This is why you should not rinse after brushing your teeth
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“