பலருக்கு அவ்வப்போது ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுகிறது- சில நேரங்களில் அது வலிமிகுந்ததாக இருக்கும் – மற்ற நேரங்களில், இது மருத்துவ கவனிப்பு தேவைப்படும் சில அடிப்படை வாய்வழி சுகாதார நிலையை குறிக்கலாம்.
லக்னோவைச் சேர்ந்த அழகியல் பல் மருத்துவர் தாமினி அகர்வால் கருத்துப்படி, உங்கள் பற்களைப் பராமரிப்பது முக்கியம் என்றாலும், ஈறுகளைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை பலர் மறந்துவிடுகிறார்கள், இது உங்கள் வாய்வழி சுகாதார வழக்கத்தின் முக்கிய பகுதியாகும்.
"நீங்கள் பல் துலக்கும்போது உங்கள் ஈறுகளில் இரத்தம் வந்தால், நீங்கள் ஈறு அழற்சியின் (gingivitis) லேசான நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஈறுகளில் இரத்தக்கசிவு மிகவும் பொதுவானது. சிறந்த சிகிச்சையைப் பற்றி உங்களுக்கு ஆலோசனை வழங்கும் உங்கள் பல் மருத்துவரை எப்போதும் சந்திப்பதே சிறந்த பரிந்துரையாகும்.
இருப்பினும், ஈறுகளில் இரத்தப்போக்கு மற்றும் வீக்கத்தைத் தடுக்க உதவும் சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன என்று மருத்துவர் கூறுகிறார். தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
கிராம்பு எண்ணெய்
சிறந்த வீட்டு வைத்தியங்களில் ஒன்றாகக் கருதப்படும் இது, ஈறுகளின் வீக்கத்தைக் குறைக்கவும், இரத்தக் கசிவை நிறுத்தவும் உதவுகிறது. சிறிது கிராம்பு எண்ணெயை எடுத்து உங்கள் ஈறுகளில் நேரடியாக தேய்க்கவும் அல்லது ஒன்று அல்லது இரண்டு கிராம்புகளை மெல்லவும். நீங்கள் லேசான எரியும் உணர்வை உணரலாம், ஆனால் அது வீக்கத்தைக் குறைக்க உதவும்.
கற்றாழை
கற்றாழை பல சிகிச்சைப் பண்புகளைக் கொண்டுள்ளது அவற்றில் ஒன்று ஈறு அழற்சியைக் குறைப்பதாகும். கற்றாழை கூழ் சிறிதளவு எடுத்து ஈறுகளில் மசாஜ் செய்யவும். கூழ் நன்றாக ஈறுகளில் குடியேறிய பிறகு வாயை கழுவவும். இயற்கையான கற்றாழை ஜெல் உள்ள திரவங்களை உட்கொள்வதன் மூலம் லேசான ஈறு நோய்களைக் கவனித்துக்கொள்ளலாம்.
ஆயில் புல்லிங்
ஆயில் புல்லிங் என்பது உங்கள் ஈறுகளில் இரத்தக் கசிவை உண்டாக்கும் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுவதற்காக உங்கள் வாயில் சிறிது எண்ணெயை கொப்பளிக்கும் முறையாகும். உங்கள் வாயில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை உறுதி செய்ய தேங்காய் அல்லது எள் எண்ணெயுடன் செய்யவும்.
வைட்டமின் சி
நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை வைட்டமின் சி நிறைந்த ஆதாரங்கள், இவை ஈறுகளின் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. ஒவ்வொரு நாளும் அரை நெல்லிக்காய் அல்லது எலுமிச்சையை உட்கொள்வது வைட்டமின் சி குறைபாட்டை தடுப்பதில் நன்மை பயக்கும்.
இதேபோல, ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுவதை இன்னும் பல வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அவற்றை அடுத்த தொகுப்பில் பார்க்கலாம்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “