/indian-express-tamil/media/media_files/2025/09/09/dermatologist-dr-shwetha-rahul-about-sweat-under-breast-rashes-tamil-news-2025-09-09-20-54-24.jpg)
ப்ரா அணிவதால் ஏற்படும் அதீத வியர்வை தடுக்க எளிய தீர்வை சொல்கிறார் தோல் மருத்துவர் ஸ்வேதா ராகுல்.
ப்ரா அணிவது ஒவ்வொரு பெண்ணுக்கும் முக்கியமானதாக இருக்கிறது. இதனை அணியத் தொடங்குவதற்கான திட்டவட்டமான வயது எதுவும் இல்லை என்றாலும், ப்ரா அணியத் தயாராக இருப்பதைக் குறிக்கும் அறிகுறிகளை அடையாளம் காண்பது அவசியம். ப்ராவின் முதன்மை நோக்கம் மார்பகங்களுக்கு ஆதரவை வழங்குவதாகும்.
பொருத்தமற்ற ப்ராக்கள் மார்பகங்களின் தோற்றத்தை சேதப்படுத்தும், அதே சமயம் இறுக்கமான ப்ராக்கள் விலா எலும்புகள், முதுகு, கழுத்து மற்றும் தோள்களை கணிசமாக பாதிக்கும். சமீபத்திய கணக்கெடுப்பின்படி, 80% பெண்கள் தவறான ப்ரா அளவை அணிகிறார்கள். எனவே, உங்களுக்கான சரியான ப்ராவைக் கண்டுபிடித்து அணிய வேண்டும். இது மிகவும் முக்கியமான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ப்ரா அணிவதால் அதீத வியர்வை சுரக்கிறது. மேலும் ஒருவித அரிப்பு ஏற்படுகிறது. அதனால், சில வலி தரும் கட்டிகள் உருவாகின்றன. இதனைத் தடுக்க எளிய தீர்வை சொல்கிறார் தோல் மருத்துவர் ஸ்வேதா ராகுல்.
இதுபற்றி டாக்டர் ஸ்வேதா சே ஸ்வாக் யூடியூப் சேனலில் பேசுகையில், "எல்லாப் பெண்களும் இந்த பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். குறிப்பாக கோடை காலங்களில் இந்தப் பிரச்சனை அதிகமாகவே இருக்கிறது. இதனை 'வியர்வை தோல் அழற்சி' என்று அழைக்கிறார்கள். ப்ரா அணியும் இடங்களில் வியர்வை எப்போதும் வந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக நெஞ்சு பகுதிக்கு கீழ் குளிர்ச்சியாக இருப்பதால் வியர்வை அதிகம் சுரக்கிறது. அதனால், அந்த இடத்தில் எரிச்சல், வறண்ட தன்மை, நிறமி ஏற்படுகிறது.
இதற்கான எளிய தீர்வு என்னவென்றால், ஒரு சிறிய மென்மையான துணியை எடுத்து மார்பகங்களுக்கும் - ப்ராவுக்கும் நடுவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒருநாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை, உங்களால் எப்போதெல்லாம் அதனை செய்ய முடியும் என்று தோன்றுகிறோதோ அப்போதெல்லம் அதுபோல் செய்து கொள்ளுங்கள். மென்மையான துணியைக் கொண்டு அவ்வப்போது வியர்வை துடைத்து கொள்ளலாம். கலமைன் அலோ வேரா (கற்றாழை) சேர்த்த க்ரீம்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us