முகப்பரு முதல் தழும்பு, சீரற்ற தோல் நிறம் வரை நாம் அனைவரும் எளிதில் சமாளிக்க முடியாத பல கடுமையான தோல் பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம்.
இதைத் தவிர இணையத்திலும் பல தோல் பராமரிப்பு குறிப்புகள் நிரம்பி கிடக்கின்றன. இது உங்கள் தோல் பிரச்சனைகளை விரைவாகவும் திறமையாகவும் தீர்க்கும் என அவை உறுதியளிக்கிறது. நமது தோல் பிரச்சனைகளுக்காக நாம் அடிக்கடி இந்த வழிகளை நோக்கி திரும்புகிறோம். ஆனால், பெரும்பாலும், அவை உங்கள் சருமத்திற்கு நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும்.
எனவே, கண்மூடித்தனமாக அவற்றைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, தோல் பராமரிப்பு குறிப்புகளில் இருந்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
தோல் மருத்துவர் ஆஞ்சல் பந்த், சமீபத்தில் உண்மையில் வேலை செய்யாத ஆறு பிரபலமான தோல் பராமரிப்பு குறிப்புகளை தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் பகிர்ந்துள்ளார். அவை மாறாக உங்கள் சருமத்தை மேலும் சேதப்படுத்தலாம். அது என்ன என்று பாருங்கள்!
கரும்புள்ளிகள் மீது எலுமிச்சை தேய்ப்பது
இது ஒரு பழைய குறிப்பு, இது வேலை செய்யாது. எலுமிச்சையில் வெளிறச்செய்யும் பண்புகள் உள்ளன. அது சருமத்தை சென்சடைஸ் செய்கிறது. இது சூரியனின் விளைவுகளில் இருந்து உங்கள் சருமத்தை மேலும் சென்சிட்டிவ் ஆக்கும். குறிப்பாக டஸ்கி ஸ்கின் நிற தோலை உடையவர்களுக்கு இது கரும்புள்ளிகளை மோசமாக்கும்.
அக்குள்களில் சமையல் சோடா
பேக்கிங் சோடா எனப்படும் சமையல் சோடாவை தோலில் எங்கு தேய்த்தாலும், அது நல்ல யோசனையல்ல என்று டாக்டர் பாந்த் கூறுகிறார்.
முகப்பரு மீது பற்பசை தடவுவது
வேண்டவே வேண்டாம். இது தோல் எரிச்சலை ஏற்படுத்தும். முகப்பருவில் பலவீனமான தோல் தடை உள்ளது. எனவே பற்பசையைப் பயன்படுத்துவதன் மூலம், சருமத்தை மேலும் சேதப்படுத்துவீர்கள். இது முகப்பரு குணமாகும் காலத்தை நீடித்து, முகத்தில் கரும்புள்ளிகளை விட்டுச் செல்லும்.
அழகுக்காக பால் பவுடர் தேய்ப்பது
வெள்ளைப் பொருளை முகத்தில் தடவுவதால் வெள்ளையாகாது. பாலில் லாக்டிக் அமிலம் உள்ளது. அது உங்கள் தோலின் நிறத்தை மாற்றாது. உங்கள் இயற்கையான தோலின் நிறத்தை எதுவும் மாற்ற முடியாது.
மருக்களில் சுண்ணாம்பு மற்றும அமிலம் தடவுவது
மருக்களில் சுண்ணாம்பு தடவுவது பொதுவான நடைமுறையாகும். இதைச் செய்து தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொண்டவர்களிடமிருந்து எனக்கு நிறைய அழைப்புகள் வருகின்றன. தயவு செய்து இதை செய்யாதீர்கள். இது தோலை எரிக்கும் மற்றும் மச்சத்தை அகற்றாது, ”என்று அவர் பகிர்ந்து கொண்டார்.
முகப்பருவில் பெட்னோவேட் தடவுவது
முகப்பரு அல்லது அழகுக்காக முகத்தில் ஸ்டீராய்டு பயன்படுத்துவது குறித்து நூற்றுகணக்கான வீடியோக்கள் யூடியுப்பில் உள்ளன. தோல் மருத்துவரிடம் ஆலோசிக்காமல் ஸ்டீராய்டுகளை முகத்தில் பயன்படுத்தக் கூடாது. ஸ்டீராய்டுகள் சருமத்தை மெல்லியதாக மாற்றி மேலும் முகப்பருக்களை ஏற்படுத்தும் என தோல் மருத்துவர் ஆஞ்சல் பந்த் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.