ஐதாராபாத்தில் செயல்படும் பிரைம் டெர்ம் ஸ்கின் அண்ட் ஹேர் கிளினிக்கின் நிறுவனர் மற்றும் தலைமை தோல் மருத்துவர் ஸ்ரீ சாஹிதி கொனிடேனா கிளாரிஃபையின் ஷாம்பு (clarifying shampoo) பற்றி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், கிளாரிஃபையின் ஷாம்பு ஒருமுறை பயன்படுத்தப்படுகிறது. deep cleansing-காக பயன்படுத்தப்படுகிறது. முடியில் உள்ள sebum-ஐ சுத்தம் செய்து அகற்ற வடிவமைக்கப்படுகிறது.
ஆனால் பொதுவாக இது தலையில் பயன்படுத்தப்பட்ட ஹேர் ஸ்ப்ரே, ஜெல் மற்றும் மியூஸ் போன்ற ஸ்டைலிங் பொருட்களை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுகிறது" என்று கூறினார்.
“இது ஒருவர் தலைமுடியை எவ்வாறு பராமரிக்கிறார் என்பதை பொறுத்து பயன்படுத்த வேண்டும். இதை வாரத்திற்கு ஒரு முறை அல்லது 3 வாரங்களுக்கு ஒரு முறை பயன்படுத்தலாம். Dry scalp உள்ளவர்கள் மாதத்திற்கு ஒருமுறை அல்லது 6 வாரங்களுக்கு ஒருமுறை பயன்படுத்தலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.
"இந்த ஷாம்புவில் அதிக அளவு சர்பாக்டான்ட்கள் உள்ளன. strong ஆக இருக்கும். இது ஒரு முறை பயன்படுத்தும் வகையானது ”என்றார்.
இதை சிறந்த முறையில் எப்படி பயன்படுத்துவது?
இந்த ஷாம்புவை தினமும் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் இது உங்கள் scalp-ஐ வறட்சி ஆகும் மற்றும் sensitive scalp உள்ளவர்கள் கவனமாக பயனன்படுத்த வேண்டும். ஈரமான முடியில் சிறிதளவு எடுத்து அப்ளை செய்யவும். ஷாம்பு செய்த பிறகு, வறட்சியைத் தடுக்க கண்டிஷனரைப் பயன்படுத்துவது நல்லது என்றார்.
எனினும் சொரியாசிஸ் போன்ற ஸ்கால்ப் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரின் அறிவுரைகளைப் பெற்று பயன்படுத்த வேண்டும் என கொனிடேனா கூறியுள்ளார். மேலும், dry hair உள்ளவர்கள் கண்டிப்பாக 6 வாரங்களுக்கு ஒருமுறை தான் பயன்படுத்த வேண்டும் அல்லது மாதத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.
எண்ணெய் பசை உள்ளவர்கள் 2 வாரங்களுக்கு ஒருமுறை இதைப் பயன்படுத்தலாம் என்று அவர் மேலும் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“