அதிகப்படியான சூரிய ஒளி மற்றும் இரசாயன சிகிச்சைகள் முதல் கவனக்குறைவு வரை - பல காரணங்களால் நம் தலைமுடி மந்தமாகவும், சேதமடைந்ததாகவும், உடையக்கூடியதாகவும் இருக்கும். சேதமடைந்த கூந்தல் உங்கள் ஒட்டுமொத்த தோற்றத்தைத் தணித்து, அந்த ரம்மியமான ஆரோக்கியமான அழகுக்கு ஏங்க வைக்கும்.
உங்களுக்கு மந்தமான மற்றும் உடையக்கூடிய முடி பிரச்சனை இருந்தால், நீங்கள் இனி கவலைப்பட வேண்டியதில்லை. தோல் மருத்துவர் ஆஞ்சல் பந்த், சமீபத்தில், வீட்டிலேயே சேதமடைந்த முடியை நிர்வகிக்க சில எளிய குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.
"லேசான சேதம் அல்லது வறட்சியை கண்டிஷனர்கள் மற்றும் முடி சீரம் மூலம் சமாளிக்க முடியும். கூந்தல் அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு முனைகள் பிளவுபட்டிருந்தால் (split ends), சேதமடைந்த முடி வளரும்போது அவற்றைக் கத்தரிப்பதைத் தவிர உங்களால் எதுவும் செய்ய முடியாது ” என்று இன்ஸ்டாகிராம் வீடியோவில் அவர் கூறினார்.
சேதமடைந்த முடிக்கு, தோல் மருத்துவர் பகிர்ந்த இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்.
ஒவ்வொரு ஆறு வாரங்களுக்கும் ட்ரீம் செய்யவும்
பிளவுபட்ட முடிகள் மற்றும் சேதமடைந்த முடியைப் போக்க உங்கள் தலைமுடியை தவறாமல் டிரிம் செய்ய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பிளவுபட்ட முனைகள் கொண்டிருப்பதால், உங்கள் தலைமுடி சீரற்றதாகவும் மந்தமாகவும் இருக்கும். அவை முடியை உடையக்கூடியதாகவும் ஆக்குகின்றன. எனவே, உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக தோற்றமளிக்க ஒவ்வொரு ஆறு வாரங்களுக்கும் ஒருமுறை ட்ரீம் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு முறை கழுவிய பிறகும் திக் கண்டீஷனர்
ஒவ்வொரு முறை ஷாம்பூ செய்த பிறகும், திக் கண்டீஷனர் பயன்படுத்துவது ஆரோக்கியமான முடியைக் கொடுக்கும். உள்ளிருந்து ஊட்டமளிப்பதன் மூலம் அவை சேதமடைவதைத் தடுக்கும். "லேசான சேதம் அல்லது வறட்சியை கண்டிஷனர்கள் மற்றும் ஹேர் சீரம் மூலம் சமாளிக்க முடியும்," என்று பாந்த் கூறினார்.
வாரத்திற்கு ஒரு முறை ஹேர் மாஸ்க்
நீங்கள் உங்கள் முடி பராமரிப்பு வழக்கத்தை அதிகரிக்க விரும்பினால், ஒரு ஹேர் மாஸ்க் சரியான கூடுதலாக இருக்கும்.
உங்கள் தலைமுடியைச் சுத்தப்படுத்துவது முதல், அவற்றுக்கு தேவையான ஊட்டச் சத்துகளை வழங்குவது வரை - சேதமடைந்த முடியைப் பராமரிக்க ஹேர் மாஸ்க்குகள் அவசியம்.
ஈரமான முடி மீது ஹேர் சீரம்
தோல் மருத்துவரின் கூற்றுப்படி, ஹேர் சீரம் லேசான முடி சேதம் மற்றும் வறட்சியை சமாளிக்க உதவும். சீரம் சில துளிகள் எடுத்து, உங்கள் முடி இன்னும் ஈரமாக இருக்கும் போது, கூந்தலின் நீளத்திற்கு தடவவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.