/tamil-ie/media/media_files/uploads/2022/01/sunscreen.jpg)
Dermatologist shares the perfect way to use sunscreen
வெளியில் உள்ள வானிலை, பருவம் அல்லது வெயிலில் செல்ல உங்களுக்குத் திட்டம் இல்லை என்றாலும் கூட, சன்ஸ்கிரீன் என்பது பேச்சுவார்த்தைக்குட்படாத, தோல் பராமரிப்பு வழக்கத்தின் உள்ளார்ந்த பகுதி என்பது நிறுவப்பட்டுள்ளது. பலர் இதைப் புரிந்துகொண்டு தங்கள் சன்ஸ்கிரீனுடன் கூட நட்பாக இருக்கிறார்கள்.
ஆனால், அடுத்து எழும் முக்கியமான கேள்வி, முகத்தில் லோஷனை எப்படி சரியாகப் பயன்படுத்துவது என்று அவர்களுக்குத் தெரியுமா?
பெரும்பாலும், மக்கள் இந்த அதிசய லோஷனை, ஒரு சிட்டிகை எடுத்து தங்கள் முகத்தில் அணிவார்கள்; சில சமயங்களில் காதுகளுக்குப் பின்பகுதி மற்றும் கழுத்தில் உள்ள தோல் போன்ற முக்கிய பகுதிகளை அவர்கள் தவிர்க்க நேரிடும்.
தோல் மருத்துவரான டாக்டர் சு, சன்ஸ்கிரீன்களைப் பயன்படுத்துவதற்கான சரியான முறையை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.
பாருங்கள்.
பெரும்பாலான மக்கள் தங்கள் விரல் நுனியில் சிறிது சன்ஸ்கிரீனை எடுத்து, பின்னர் அவற்றை முகத்தில் தேய்க்கிறார்கள். ஆனால், இது தவறான முறை.
அதற்குப் பதிலாக, நீங்கள் தாராளமாக, உங்கள் ஆள்காட்டி மற்றும் நடுவிரல்களில் லோஷனை எடுத்து, ஃபேஸ் மாஸ்க் போல (வீடியோவில் காட்டப்பட்டுள்ளபடி) முகம் முழுவதும் சமமாகப் பூச வேண்டும். பிறகு, சன்ஸ்கிரீன் தோல் மற்றும் கழுத்துப் பகுதியில் ஊடுருவும் வரை உங்கள் நிதானமாக மசாஜ் செய்ய வேண்டும்.
இந்த நுட்பத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.