ஒவ்வொரு கால சூழலுக்கு ஏற்றவாறு நம் சரும பராமரிப்பில் சில விஷங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அதன்படி, குளிர் காலங்களில் நாம் செய்யக் கூடாத சிலவற்றை மருத்துவர் மிக்கி சிங் பரிந்துரைத்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Dermatologists suggest 3 skincare red flags to avoid this winter
மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவதை தவிர்க்கக் கூடாது
குளிர் காலங்களில் நம் சருமம் வறட்சியாக காணப்படும். எனவே சருமத்தில் ஈர்ப்பதத்தை நிலைத்திருக்க செய்ய வேண்டுமானால் மாய்ஸ்சரைசரை பயன்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பலர் மாய்ஸ்சரைசரை முகத்தில் மட்டுமே பயன்படுத்துகின்றனர். அவ்வாறு இல்லாமல் கழுத்து, கைகள் போன்ற உடலின் அனைத்து பாகங்களிலும் மாய்ஸ்சரைசரை பயன்படுத்தலாம். மேலும், குளித்து விட்டு வந்த உடனேயே மாய்ஸ்சரைசரை பயன்படுத்துவது, ஈரப்பதத்தை மேலும் நிலைத்திருக்க செய்யும் எனவும் மருத்துவர் மிக்கி சிங் தெரிவித்துள்ளார்.
கடும் விளைவுகளை ஏற்படுத்தும் க்ளென்சர்களை தவிர்க்கவும்
ஆல்கஹால்கள், சல்பேட் மற்றும் நறுமண பொருள்கள் கொண்டு உருவாக்கப்பட்ட க்ளென்சர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவை சருமத்தில் வறட்சி தன்மை மற்றும் எரிச்சலை ஏற்படுத்தக் கூகும். குறிப்பாக, நம் சருமத்தின் pH தன்மை அறிந்து க்ளென்சர்கள் பயன்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதேபோல், மேக்-அப் பயன்படுத்துவர்கள் முதலில் ஆயில் க்ளென்சர்கள் பயன்படுத்தி கழுவி விட்டு, தொடர்ச்சியாக வாட்டர் க்ளென்சர்களை பயன்படுத்தலாம் என மருத்துவர் மிக்கி சிங் கூறுகிறார்.
மேலும், குளிர் காலங்களில் ஃபிசிக்கல் எக்ஸ்ஃபாலியேஷன்களை பயன்படுத்தாமல் லக்டிக் ஆசிட் மற்றும் க்ளைக்காலிக் ஆசிட் எக்ஸ்ஃபாலியேஷன்களை பயன்படுத்தினால் சருமத்தில் உள்ள டெட் செல்களை நீக்க உதவியாக இருக்கும் எனவும், இவை சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் அழக்குக் கலை நிபுணரான கிரண் பட் தெரிவித்துள்ளார்.
சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதை தவிர்க்கக் கூடாது
குளிர் காலங்களில் சூரியனின் தாக்கம் அதிகளவில் இல்லை என நாம் உணரலாம். ஆனால், புறஊதாக்கதிர்கள் நம்மைச் சுற்றி எப்போதுமே இருப்பவை. இவை நமது சருமத்தை அதிகளவில் பாதிக்கும். இவை சருமத்தில் வயதான தோற்றம் மற்றும் நிற மாறுபாட்டை உண்டு செய்யக் கூடும். க்ரீம் மற்றும் லோஷன் போன்ற சன்ஸ்க்ரீன்களை குளிர் காலங்களில் பயன்படுத்தலாம் என மருத்துவர் மிக்கி சிங் பரிந்துரைக்கிறார்.
உங்கள் சருமம் சென்ஸிட்டிவ் ஆக இருந்தால் ஸின்க் ஆக்ஸைடு மற்றும் டைட்டனியம் டைஆக்ஸைடு மூலப்பொருள்களால் ஆன சன்ஸ்க்ரீன்களை பயன்படுத்தலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“