காசியா அப்சஸ் (Cassia Absus) என்னும் தகரை செடிகள் பற்றி தெரியுமா? இது நம்மூர் காடுகளில் வளரும் ஒரு அரிய வகை மூலிகைச் செடி.
இந்தச் செடியை பற்றி நமது சித்த மருத்துவத்தில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. பொதுவாக தகரை செடிகளை ஊசித் தகரை, யானைத் தகரை, கருந் தகரை என வகைப்படுத்துவார்கள்.
இந்தச் செடியின் விதை மற்றும் இலைகள் மனித உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கவல்லவை. மேலும், மலச் சிக்கலையும் குணப்படுத்தும் ஒரு அருமருந்தாகும்.
இது குறித்து பிரபல ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ரா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் நன்மைகளைப் பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர், பல ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர் பெற்ற சக்சு விதைகள் பொதுவாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
சீசல்பினியேசியே குடும்பத்தைச் சேர்ந்த இந்த தாவரத்தின் விதைகள் மற்றும் இலைகள் மருத்துவ குணங்களுக்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
எனவே, இவை காசியா அப்சஸ் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தச் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், குறிப்பாக வடமேற்கு இந்தியாவிலும், இமயமலையின் அடிவாரத்திலும், இலங்கையிலும் காணப்படுகின்றன.
இந்த விதைகளில் பல மருத்துவ குணங்கள் உள்ளன, அவை கஷாயம், பொடி மற்றும் சாறு வடிவில் பயன்படுத்தப்படலாம்” என்றார்.
மற்றொரு மருத்துவர் கரிஷ்மா ஷா, தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் (indianexpress.com) கூறுகையில், “விதைகள் இயற்கையில் டையூரிடிக், அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன, எனவே சிறுநீரகம், கல்லீரல் மற்றும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளை நிர்வகிக்க நல்லது.
மேலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. சிலர் இதை முகமூடியாகவும், கண்களைச் சுத்தம் செய்யவும் பயன்படுத்துகிறார்கள். ஆயுர்வேதத்தின்படி, உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதற்கும் இது உதவியாக இருக்கும். மேலும் இதன் பொடி 2 கிராம் போதும், மலச்சிக்கலுக்கு நல்ல மருந்தாக பயன்படும்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil