/tamil-ie/media/media_files/uploads/2023/04/milk_200_getty.jpg)
பாலின் கலப்படத்தை கண்டறியும் சோதனையை fssai தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. (Source: Getty/ Indianexpress)
அன்றாட உணவுப் பொருட்களில் கலப்படம் என்பது ஒரு பொதுவான பிரச்னையாக மாறியுள்ளது. இது அந்த குறிப்பிட்ட உணவை பாதுகாக்கும் செயல்களில் ஒன்றாக கருதப்பட்டாலும், உட்கொள்ளும் மக்களுக்கு பெரும்பான்மையாக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதனால் மக்களின் மத்தியில் கலப்படம் என்றாலே கவலையை கொடுக்கிறது. இதைத் தொடர்ந்து, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) இதுபோன்ற கலப்படங்களைச் சரிபார்க்க உதவும் பயனுள்ள மற்றும் எளிமையான ஹேக்குகளை மக்களுடன் பகிர்ந்து கொள்கிறது.
"உணவில் கலப்படம் செய்வது நுகர்வோரை ஏமாற்றுகிறது மற்றும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் பொதுவாக உணவில் கலப்படம் செய்வதற்கு வைத்திருக்கும் வழிமுறைகளை மக்களின்முன் பட்டியலிடும் நோக்கம் தான் இது,” என்று FSSAI தனது இணையதளத்தில் பதிவிட்டனர்.
எனவே, சமீபத்திய வெளியீட்டில், சாய்வான மேற்பரப்பைப் பயன்படுத்தி எளிய சோதனை மூலம் பாலில் கலப்படத்தை எவ்வாறு கண்டறிவது என்பதைப் பகிர்ந்துள்ளது. அறியாதவர்களுக்கு, பாலில் தண்ணீரைக் கலந்து அதன் அளவை அதிகரிப்பது மிகவும் பொதுவான கலப்பட நடைமுறைகளில் ஒன்றாகும்.
“உங்கள் பாலில் தண்ணீரில் கலப்படமா? ஒரு எளிய சோதனை மூலம் நீங்கள் அதை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பது இங்கே,” என்று FSSAI ட்வீட் செய்திருக்கிறது.
Is your milk adulterated with water? Here is how you can check it through a simple test.#FSSAI#EatRightIndia#CombatAdulteration#foodsafetyhttps://t.co/SB1ktv09KU
— FSSAI (@fssaiindia) April 13, 2023
கலப்படத்தை எவ்வாறு சரிபார்க்கலாம்?
சாதாரண கண்ணாடி போன்ற பளபளப்பான சாய்வான மேற்பரப்பில் ஒரு துளி பாலை வைக்கவும்.
முடிவுகளை எவ்வாறு கண்டறிவது?
- சுத்தமான பால் துளி அங்கிருந்து சரிந்து நகரும்போது, வெண்மையான பாதையை உருவாகும்.
- தண்ணீரில் கலப்படம் செய்யப்பட்ட பால், தடம் புரளாமல் உடனடியாக நகரும்.
"வீட்டில் பால் பரிசோதனை செய்வது மிகவும் முக்கியமானது, ஏனெனில் விற்பனையாளர்கள், பெரும்பாலும், அதிக லாபத்திற்காக தண்ணீரில் கலப்படம் செய்யலாம். இதனால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மேலும் தண்ணீர் மாசுபட்டால் உடல்நலப் பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம். எனவே, எப்பொழுதும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது மற்றும் வீட்டிலேயே இந்த எளிதான சோதனையை முயற்சி செய்வது நல்லது, ”என்று பதிவு செய்யப்பட்ட உணவியல் நிபுணரான கரிமா கோயல், இந்தியன் எஸ்பிரஸிடம் கூறினார்.
கலப்பட நீர் பயன்படுத்தினால் என்ன நடக்கும்?
காலரா, வயிற்றுப்போக்கு, ஹெபடைடிஸ் ஏ, டைபாய்டு போன்ற நீரால் பரவும் நோய்களுக்கு வாய்ப்புகள் உள்ளன என்று கோயல் கூறினார்.
கொதிக்கும் பால் பாக்டீரியாவை அழிக்குமா?
"கொதிக்க வைப்பதால், பெரும்பாலான ஒட்டுண்ணி வகைகள், பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களைக் கொள்ள உதவும். ஆனால், பாலில் கலப்படம் செய்யப் பயன்படுத்தப்படும் தண்ணீர் வடிகட்டப்படாத குழாய் நீராக இருந்தால், கலப்படம் செய்யப்பட்ட பாலை கொதிக்க வைத்தாலும், அனைத்து நுண்ணுயிர்கள் மற்றும் ரசாயனங்கள் அழிக்கப்படாது", என்று கோயல் கூறினார்.
“மேலும், இதுபோன்ற நோய்க்கிருமிகளைக் கொண்ட நீர், அதில் உள்ள அனைத்து பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் பிற அசுத்தங்களைக் கொல்ல குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் கொதிக்க வேண்டும். கூடுதலாக, க்ளோஸ்ட்ரிடியம் போட்யூலினம் போன்ற பல பாக்டீரியா இனங்கள் கொதிக்கும் வெப்பநிலையைத் தக்கவைக்கின்றன, ”என்று கோயல் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.