மது, புகையால் கல்லீரல் பாதிப்பு? சுத்தம் செய்ய இந்த ஒரு ஜூஸ் நாள் முழுக்க குடிங்க: டாக்டர் சகுல்
கல்லீரலை சுத்தப்படுத்த நம்மால் எளிமையாக பின்பற்றக் கூடிய வழிமுறைகளை மருத்துவர் சகுல் முகுந்தன் தெரிவித்துள்ளார். அதற்காக பிரத்தியேக ஜூஸ் தயாரிக்கும் முறையையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நம் உடலில் முக்கியமான உறுப்பாக கல்லீரல் கருதப்படுகிறது. நாம் சாப்பிடும் உணவுகள் செரிமானம் ஆவதில் தொடங்கி, நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் உடலில் செயல்படுவது வரை முக்கியமான பணியை கல்லீரல் செய்கிறது. நம் உடலில் உருவாகும் சில டாக்ஸின்சை அகற்றுவதற்கும் கல்லீரல் பயன்படுகிறது என மருத்துவர் சகுல் முகுந்தன் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
புரதம் உற்பத்தியாவதும் கல்லீரலில் இருந்து தான் என வல்லுநர்கள் கூறுகின்றனர். இரத்தத்தில் உள்ள சர்க்கரை, கொலஸ்ட்ரால் அளவை சீரமைப்பதிலும் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய கல்லீரலில் பிரச்சனை ஏற்பட்டால் அது உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தால் தான் நிகழும் என்று மருத்துவர் சகுல் முகுந்தன் தெரிவித்துள்ளார்.
உதாரணத்திற்கு, மது அருந்துதல், புகைபிடித்தல் போன்றவை கல்லீரலை பெருமளவு பாதிக்கும். மேலும், சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளாததும் இதில் பிரச்சனையை ஏற்படுத்தும். இவை அனைத்தும் கல்லீரலின் செயல்பாடுகளை பாதிக்கும். எனவே, கல்லீரலை சுத்தப்படுத்துவது மிக அவசியம்.
முதலில் தண்ணீர், எலுமிச்சை, வெள்ளரிக்காய் மற்றும் புதினா ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு லிட்டர் தண்ணீரில் எலுமிச்சை சாறை பிழிந்து எடுத்துக் கொள்ளலாம். இன்னொரு எலுமிச்சை பழத்தை சிறிய துண்டுகளாக வெட்டி, அதே தண்ணீரில் போட்டுக் கொள்ள வேண்டும். மேலும், வெள்ளரிக்காயையும் சிறிய துண்டுகளாக வெட்டி அதில் சேர்த்துக் கொள்ளலாம். இத்துடன் 5 அல்லது 6 புதினா இலைகளை சேர்த்து கலக்க வேண்டும்.
Advertisment
Advertisement
இந்த ஜூஸை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சிறிது, சிறிதாக குடிக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் இதைத் தவிர வேறு எதையும் சாப்பிடக் கூடாது. இவ்வாறு செய்வதன் மூலம் கல்லீரலை சுத்தப்படுத்த முடியும் என மருத்துவர் சகுல் முகுந்தன் தெரிவித்துள்ளார். இதனை மாதத்திற்கு ஒரு முறை பின்பற்றலாம் என அறிவுறுத்துகிறார்.
ஆனால், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள், முதியவர்கள் ஆகியோர் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் தான் இதனை பின்பற்ற வேண்டும். தாங்களாகவே இதனை எடுத்துக் கொள்ளக் கூடாது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.