உடல் எடையை குறைக்க உதவும் டீடாக்ஸ் பானங்கள்!

கல்லீரலால் கரைக்க முடியாத கொழுப்புகளை கரைத்து நிணநீர் சுரப்பிகளில் உள்ள கொழுப்பையும் கறைத்து உடம்பை சீர் செய்கின்றது.

weight loss drinks
weight loss drinks

தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யும் போது உடல் சோர்வடையும். உடல் எடையை குறைக்க தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதாது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற வேண்டும். அதற்கான பானங்களை இங்கே குறிப்பிடுகிறோம்.

ஸ்ட்ராபெர்ரி லைம் வாட்டர்

4 ஸ்ட்ராபெர்ரியை எடுத்துக் கொண்டு, ஒரு பாத்திரத்தில் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை தூள், 1 எலுமிச்சை ஆகியவற்றை தண்ணீரில் போட்டு ஒரு நாள் முவதும் ஊற வைக்க வேண்டும். இவ்வாறு ஊறிய தண்ணீரை மறுநாள் காலையில் குடிக்கவும்.

கிரான்பெர்ரி லைம் வாட்டர் 

மிக்ஸியில் 4-5 கிரான்பெர்ரியுடன் அரை தேக்கரண்டி தேன் சேர்த்து அரைத்து கொள்ளவும். அத்துடன் அரை கப் சோடா நீர் மற்றும் ஒரு எலுமிச்சை, சேர்த்து அரைத்து குடிக்கலாம். இது உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்.

கிரான்பெர்ரி லைம் ஃபிஸ்

குருதிநெல்லி அல்லது கிரேன்பெர்ரி எனக் கூறப்படும் இதில், அதிக அளவு மேலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் கூயினிக் அமிலம் ஆகியவை உள்ளன. இவை கடினமான கொழுப்புகளையும் கரைக்க உதவுகிறது. கல்லீரலால் கரைக்க முடியாத கொழுப்புகளை கரைத்து நிணநீர் சுரப்பிகளில் உள்ள கொழுப்பையும் கறைத்து உடம்பை சீர் செய்கின்றது.
குருதிநெல்லி சாறு நிணநீர் கழிவுகளை நீக்கி கொழுப்பை கரைக்கின்றது. தினமும் ஒரு கப் தண்ணீரில் கலந்து அருந்தலாம்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Detox drinks for weight loss strawberry lime water cranberry

Next Story
உலகைக் கவரும் தமிழ் மன்னன் கட்டிய கம்போடியா அங்கோர்வாட் கோயில்!Cambodia Angkor wat temple history architecture
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com