விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்கள் பலருடன் சேர்ந்து நடித்தவர், நடிகை தேவயானி. தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்கள் வரிசையில் இருக்கும்போதே இயக்குநர் ராஜகுமாரனை காதல் திருமணம் செய்துகொண்டவர்.
Advertisment
அந்தியூரிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சந்தியாபாளையம் கிராமம்தான் ராஜகுமாரன் சொந்த ஊர். விவசாயக் குடும்பம்.
அந்தியூரிலிருந்து எட்டுக் கிலோமீட்டர் தொலைவிலுள்ள எண்ணமங்கலம் கிராமத்திலுள்ளது இந்த தம்பதியின் விவசாய நிலம். அந்தத் தோட்டத்திலேயே ஒரு அழகான பண்ணை வீடும் உள்ளது.
Advertisment
Advertisement
இப்போது பிஹைண்ட்வுட்ஸ் சேனலில் வெளியாகி உள்ள தேவயானியில் அந்தியூர் ஹோம் டூர் வீடியோ யூடியூபில் வைரலாகி உள்ளது.
அந்த வீடியோவில் ராஜகுமாரன் கூறுகையில், ‘இது என்னோட கிராமம். இங்க ரொம்ப அமைதியாவும், நல்ல காத்தும், பறவைகள் சத்தமும், வெளிச்சம் எல்லாமே பிரமாதமா இருக்கும். காலையில 7 மணிக்கு சூரிய வெளிச்சம் நேரா பூஜை ரூம்ல விழும். வீட்டுக்குள்ள படுத்துக்கிட்டே வானத்தை பாத்துக்கலாம். நினைச்சா மழை பெய்ய வைக்கலாம்.
தேவயானிக்கு பக்தி ரொம்ப அதிகம். தினமும் காலையில சமையல் பண்ணதும் முதல்ல சாமிக்கு படைச்சுட்டு தான் நாங்க சாப்பிடுவோம்.
இந்த வீடு 2015வதுவருஷம் கட்டுனோம். இந்த வீடு உள்ளே இருந்து பார்த்தா வேற மாதிரி இருக்கும். வெளியே இருந்து பார்த்தா வேற மாதிரி தெரியும். இதுல 5 பெட்ரூம் இருக்கு. தமிழ் எழுத்து ‘ப‘ வடித்துல தான் இந்த வீடு இருக்கும். நான் 50 நாளைக்கு ஒருதடவ இங்க வந்துருவேன். இங்க தோட்டம் இருக்கு. அதை கவனிக்கனும். சந்தன மரம், பலா, மா, நெல்லி, அத்தி, சப்போட்டா, பீட்ரூட் கொய்யா நிறைய பழ மரங்கள் இங்க இருக்கு’.. இப்படி பல சுவாரஸ்யமான விஷயங்களை ராஜகுமாரன் அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“