ஒரு சீரியல்ல நாலு கேரக்டருக்கு டப்பிங் பேசியிருக்கேன்: தேவி பிரியா மெமரீஸ்

ஒரு சீரியலில் நாலு பேருக்கு பேசியிருக்கேன். பவானி என்னோட மூணாவது சீரியல். அதுல நாலு கேரக்டருக்கு பேசியிருக்கேன். அதுதான் என் ஸ்டார்ட்டிங் பாயிண்ட்.

ஒரு சீரியலில் நாலு பேருக்கு பேசியிருக்கேன். பவானி என்னோட மூணாவது சீரியல். அதுல நாலு கேரக்டருக்கு பேசியிருக்கேன். அதுதான் என் ஸ்டார்ட்டிங் பாயிண்ட்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Devi Priya Actress

Devi Priya Actress

சினிமா உலகத்தில், நட்சத்திரங்கள் முகமாக ஜொலித்தாலும், அவர்களுக்குப் பின்னால் இருக்கும் கலைஞர்களின் உழைப்பு அளப்பரியது. அப்படி, ஒரு நடிகையின் உணர்வுகளுக்கும், வசனங்களுக்கும் உயிர் கொடுக்கும் கலைஞர்கள்தான் பின்னணி குரல் கலைஞர்கள் (Dubbing Artists). அவர்களில், பல பிரபலங்களின் குரலாக ஒலித்து, தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர், நடிகை மற்றும் பின்னணி குரல் கலைஞர் தேவி பிரியா.

Advertisment

"அடடா... இவர் குரல் எங்கேயோ கேட்ட குரலாக இருக்கிறதே!" என்று நீங்கள் நினைத்திருந்தால், நீங்கள் தமிழ்த் திரைப்படங்களின் தீவிர ரசிகர் என்பதில் சந்தேகமே இல்லை. ஏனெனில், கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேலாக, பல முன்னணி கதாநாயகிகளுக்கு தனது குரலின் மூலம் உயிரூட்டியவர் தேவி பிரியா. பின்னணி குரல் கலைஞராக மட்டும் இல்லாமல், சின்னத்திரையிலும், பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்.
 
ஒருமுறை அவள் கிளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில், பவானி சீரியலில் நான்கு கேரக்டருக்கு டப்பிங் பேசியதை பெருமையுடன் தேவி பிரியா பகிர்ந்து கொண்டார். 

”ஒரு சீரியலில் நாலு பேருக்கு பேசியிருக்கேன். பவானி என்னோட மூணாவது சீரியல். அதுல நாலு கேரக்டருக்கு பேசியிருக்கேன். அதுதான் என் ஸ்டார்ட்டிங் பாயிண்ட். சிரிக்க தெரியாது. நம்ம கலகலன்னு சிரிக்கிறோம்ல, அது வரவே வராது. அதுல லைட்டெல்லாம் ஆஃப் பண்ணிட்டு, படம் டப்பிங்ன்னா வேற. பின்னாடி உட்கார்ந்திருப்பாங்க. நம்மள தெரியாது.

Advertisment
Advertisements

டிவி சீரியல் டப்பிங்ன்னா ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள்ள, நம்ம மைக், முகம் தெரியும். என்னங்க போங்க அப்படின்னு வெக்கப்பட்டுட்டு கூட டப்பிங் பண்ண முடியாது. எல்லாரும் என் மூஞ்சியவே பார்ப்பாங்க. அப்படிப் பழகிப் பழகி டப்பிங் பேசியாச்சு. நான் நதியாக்கு ஃபர்ஸ்ட் டப் பண்ணல. மீனாக்கு தான் ஃபர்ஸ்ட். அந்தப் படம் வரல. தமிழ்ல டப் பண்ணாங்க” என்று தேவி பிரியா கலகலப்புடன் அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார். 

சினிமா உலகில் பின்னணி குரல் கொடுப்பது என்பது, வெறும் வசனங்களைப் பேசுவது மட்டும் அல்ல; அது ஒரு கதாபாத்திரத்தின் மனநிலையையும், உணர்ச்சிகளையும் உள்வாங்கி, அதை நமது குரலில் வெளிப்படுத்துவது. அந்த வகையில், தேவி பிரியா பல கதாநாயகிகளின் சிரிப்பு, அழுகை, கோபம், காதல் என அனைத்து உணர்வுகளுக்கும் தனது குரல் மூலம் உயிர் கொடுத்துள்ளார்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: