திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கம் நன்கொடை: ரூ.7,000 கோடி லாபம் ஈட்டிய தொழிலதிபர் நன்றிக்கடன்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 121 கிலோ தங்கத்தை நன்கொடையாக அளிக்க தொழிலதிபர் ஒருவர் முன்வந்திருப்பதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 121 கிலோ தங்கத்தை நன்கொடையாக அளிக்க தொழிலதிபர் ஒருவர் முன்வந்திருப்பதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
tiruppathi

திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கம் நன்கொடை: ரூ.7,000 கோடி லாபம் ஈட்டிய தொழிலதிபர் நன்றிக்கடன்!

ஆந்திர மாநிலம் மங்களகிரியில் நடைபெற்ற 'P4 வறுமை ஒழிப்பு' திட்ட நிகழ்ச்சியில் பேசிய சந்திரபாபு நாயுடு, "ஒரு பக்தர் ஒரு நிறுவனத்தை அமைக்க விரும்பினார், அதைத் தொடங்கி வெற்றியும் பெற்றார். அந்த பக்தர் தன் செல்வத்தை ஏழுமலையானுக்குத் திருப்பிக் கொடுக்க முடிவு செய்தார். தற்போது அவர் 121 கிலோ தங்கத்தை வெங்கடேசப் பெருமாளுக்கு அளிக்கிறார்," என்றார்.

Advertisment

பெயரை வெளியிட விரும்பாத அந்த பக்தர், தனது நிறுவனத்தின் 60% பங்குகளை விற்றதன் மூலம் சுமார் $1.5 பில்லியன் (சுமார் ரூ.6,000 முதல் ரூ.7,000 கோடி) லாபம் கிடைத்ததாகவும், அந்தச் செல்வத்தை ஏழுமலையான்தான் தனக்குக் கொடுத்தார் என்ற நம்பிக்கையில் இந்நன்கொடை அளிக்க முடிவு செய்ததாகவும் நாயுடு தெரிவித்தார். இதன் மதிப்பு ரூ.140 கோடியாகும். புதிதாக தொடங்கிய நிறுவனம் வெற்றிகரமாக இயங்குவதால் தங்கத்தை நன்கொடையாக அளிக்க முன்வந்து இருக்கிறார். 

மேலும், ஏழுமலையான் சிலை தினசரி சுமார் 120 கிலோ தங்க நகைகளால் அலங்கரிக்கப்படுகிறது என்பதை அறிந்த அந்த பக்தர், அதைக் காட்டிலும் ஒரு கிலோ அதிகமாக, 121 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளார் என்று சந்திரபாபு நாயுடு கூறினார். எனினும், அந்த தொழில் அதிபர் யார் என்ற விவரத்தை வெளியிட சந்திரபாபு நாயுடு மறுத்துவிட்டார்.

கடந்த ஓராண்டில் திருமலை கோயிலுக்குப் பல நன்கொடைகள் வந்துள்ளன. சஞ்சீவ் கோயங்கா: இந்த ஆண்டு மே மாதம், சஞ்சீவ் கோயங்கா ரூ.3.63 கோடி மதிப்புள்ள வைரங்கள் பதிக்கப்பட்ட தங்க நகைகளை நன்கொடையாக வழங்கினார். சுதர்சன் என்டர்பிரைசஸ்: ஜூலை மாதம், சென்னையைச் சேர்ந்த சுதர்சன் என்டர்பிரைசஸ் ரூ.2.4 கோடி மதிப்பிலான 2.5 கிலோ எடையுள்ள தங்க சங்கு மற்றும் சக்கரத்தை காணிக்கையாக அளித்தது. ஒய்.வி.எஸ்.எஸ். பாஸ்கர் ராவ்: அண்மையில், ஓய்வுபெற்ற ஐஆர்எஸ் அதிகாரி ஒய்.வி.எஸ்.எஸ். பாஸ்கர் ராவ் தனது ரூ.3.66 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஏழுமலையான் கோவில் அறக்கட்டளைக்கு எழுதிக் கொடுத்தார்.

Tirupati

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: