/tamil-ie/media/media_files/uploads/2020/10/image-7.jpg)
dhal rice paruppu sadam News, paruppu sadam making video : இட்லி, தோசைக்கு பதிலாக குழந்தைகளுக்கு மிகவும் சுவை மிக்கதாக, விரைவில் ரெடியாகுமாறு ஒரு டிஸ் செய்ய வேண்டுமென்றால், அதற்கு அரிசி பருப்பு சாதம் தான் சிறந்தது
தேவையான பொருட்கள்:
அரசியை நீங்கள் ஒரு டம்பளர் எடுத்துக் கொண்டால் , துவரம் பருப்பு கால் டம்பளர் இருக்க வேண்டும். அரிசி பருப்பு சாதத்துக்கு இந்த அளவு விழுக்காடு மிக முக்கியம்.
துவரம் பருப்பு -
வெங்காயம் -
தக்காளி -
பச்சை மிளகாய் -
பூண்டு
தேங்காய்த் துருவல் -
கடுகு-
சீரகம் -
மஞ்சள்தூள் -
கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை சிறிது
உப்பு
எண்ணெய்
paruppu sadam recipe செய்முறை :
அரிசி, பருப்பை நன்றாக கழுவி 10 நிமிடம் நன்றாக ஊற வைக்கவும்.
பிறகு, சட்டியில் எண்ணெய் ஊற்றி காயவைத்து, கடுகு சீரகம் போன்றவற்றை நன்கு தாளிக்கவும்.
பிறகு தேவையானயளவு பச்சை மிளகாய், பொடிப் பொடியாக நறுக்கப்பட்ட சின்ன வெங்காயம் (10 அல்ல 15 ), 3 பச்ச மிளகாய், பூண்டு ( 3 பல் ), தக்காளி (குறைந்த அளவு தக்காளி போதுமானது), மஞ்சள்தூள், கறிவேப்பிலை என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். வதக்கும் வேளையில் தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஓரளவு வதங்கியதும், தனியாக ஊற வைத்த அரிசி, துவரப் பரும்பு கலவையை சேர்க்க வேண்டும். 2 கிளாஸ் தண்ணீர் ஊற்ற வேண்டும். உப்பு, காரத்தை சோதனை செய்து கொள்ளுங்கள்.
பிறகு, குக்கரை மூடி, மூன்று விசில் வைக்கவும். தம் அடங்கியதும் குக்கரைத் திறந்து சாதத்தை கிளறிவிடும்.
தேவையெனில், கொத்தமல்லி இலையை சிறிது தூவி விடவும்.
அவ்வளவு தான், நாம் எதிர்பார்த்த பருப்பு சாதம் ரெடியாகியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.