By: WebDesk
Updated: November 23, 2020, 08:11:14 AM
dhosa variety dhosa recipes in tamil dhosa
dhosa variety dhosa recipes in tamil dhosa: உருளைக்கிழங்கு மசாலா உள்ளே வைக்கப்பட்டு முறுகளாக சுட்டு எடுக்கப்படும் இந்த மைசூர் மசாலா தோசையுடன் கார சட்னி வைத்து சாப்பிட்டால் ருசி அலாதியாக இருக்கும். கர்நாடகா மாநிலம் உடுப்பியை பிறப்பிடமாக கொண்ட இந்த மசாலா தோசையை வெங்காயம், உருளைக்கிழங்கு, மசாலா பொருட்கள், கறிவேப்பிலை, கடுகு போன்றவை சேர்த்து எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
தோசை மாவு தயார் செய்து வைக்கவும்.
உருளைக்கிழங்கு : 250 கிராம்
மிளகாய் : 4 நறுக்கியது
வெங்காயம் : 3 கருவேப்பிலை, மல்லிச்செடி சிறிதளவு
இஞ்சி : ஒரு சிறு துண்டு
(மிகவும் மெல்லியதாக வெட்டவும்)
பொரிகடலை : 2 மேஜைக் கரண்டி
(நைசாக பொடி செய்து கொள்ளவும்)
செய்முறை
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து அரை குறையாக உதிர்த்து வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை போட்டு தாளித்து சிறிது தண்ணீர் விட்டு இலேசாக வெங்காயத்தை வேக விடவும். மஞ்சள் தூளும் உப்பும் சேர்த்துக் கொள்ளவும்.
தண்ணீர் சற்று வற்றியதும் உருளைக்கிழங்கு, மல்லிச்செடி சேர்த்துக் கிளறி சற்று புரட்டினாற் போல் இறக்கி, பொரிகடலை மாவைத் தூவி கிளறி வைக்கவும். தோசைக் கல்லில் தோசை மாவை ஊற்றி நைஸாக விரித்து திருப்பிப்போட்டு பின் எடுக்கும் சமயம் பாதி தோசையில் ஒரு கரண்டி மசால் கிழங்கையும் சட்னியையும் விரித்து வைத்து மறுபாதி தோசையினால் மூடவும். சுவையான மசாலா தோசை ரெடி!
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”