/tamil-ie/media/media_files/uploads/2022/03/diabetic-control.jpg)
பொதுவாக இன்று பலருக்கும் நீரிழிவு ஒரு பிரச்னையாக இருந்து வருகிறது. ஒருவருக்கு நீரிழிவு இருப்பது கண்டரியப்பட்ட உடனேயே, அவர்கள் ஐயோ சுகர் வந்துவிட்டது எப்படி கடுப்பட்டுப்படுத்துவது என்று பெரும் பிரச்னையாக பார்க்கத் தொடங்கிவிடுகிறார்கள். அப்படி, நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டால், கவலைப்படத் தேவையில்லை. சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதற்கான உணவுப் பொருட்கள், உடற்பயிற்சிகளை மேற்கொண்டால், சர்க்கரையின் அளவை இயல்பாக பராமரிக்கலாம்.
சுகர் வந்துவிட்டதே என்ன செய்வது என்று கவலைப்பட வேண்டாம், சுகருக்கு சிம்பிள் தீர்வு உங்க வீட்டுலயே பொருட்கள் இருக்கிறது. அந்த 5 பொருட்கள் என்னவென்று கவனியுங்கள்.
நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டால், மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை உட்கொள்வதைத் தவிர, இயற்கையாகவே இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் உணவுகளையும் உட்கொள்ளலாம். இந்த இயற்கை மூலிகைகள், மசாலாப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவை சுகரைக் கட்டுப்படுத்துவதில் அற்புதங்களைச் செய்யும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் சில காய்கள், பழங்கள், சமையல் பொருட்கள் உள்ளன. அப்படி முக்கியமாக அனைவரின் வீடுகளிலும் எளிதாக 5 பொருட்கள் கிடைக்கின்றன. அந்த பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/neem-flower.jpg)
- வேப்பம்பூ
வேப்பம்பூ பல ஆண்டுகளாக மக்களால் பயன்படுத்தப்படும் பழமையான அற்புத மூலிகையாகும். தோல் சுத்திகரிப்பு, பல் மற்றும் தோல் பிரச்சினைகள் முதல் நச்சு நீக்கம் வரை, வேப்பம்பூ செய்யக்கூடியது நிறைய உள்ளது. “வேம்பில் ஃபிளாவனாய்டுகள், கிளைகோசைடுகள் மற்றும் ட்ரைடர்பெனாய்டுகள் எனப்படும் இரசாயனங்கள் உள்ளன. அவை ரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. வேப்பம்பூவை தினமும் 2 முறை தூளாக சாப்பிடலாம். அதிகம் பலன் கிடைக்க வேண்டும் என்றால், தேநீர், தண்ணீர் அல்லது உணவில் சேர்த்துக் கொள்ளலாம்” என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/karela-1.jpg)
- பாகற்காய்
ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் பாகற்காய் சாப்பிடுவது நல்லது. பாகற்காய் ஒரு சரியான நீரிழிவு எதிர்ப்பு காய்கறியாகும். சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் சரடின் மற்றும் மோமார்டிசின் ஆகியவை பாகற்காயில் உள்ளது. “காலையில் பாகற்காய் சாறு சாப்பிடலாம். அதில் நெல்லிக்காய் அல்லது உங்களுக்கு விருப்பமான காய்கறிகளைச் சேர்த்து, சிறிது கருப்பு மிளகு மற்றும் உப்பு சேர்த்தும் சாப்பிடலாம்” என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/GettyImages-jamun-seeds_759.jpg)
3. நாவல் பழம்
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒரு அதிசயப் பழம் உள்ளது என்றால் அது நாவல் பழம்தான். நாவல் பழம் சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயல்படுகிறது. நாவல்பழத்தில் ஜாமோபோலின் என்ற கலவை உள்ளது. சிறுநீரில் வெளியேறும் சர்க்கரையைக் குறைக்க நாவல் விதைகளில் ஜாம்போலின் அதிகம் உள்ளது. இது இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/fenugreek1.jpg)
4. வெந்தயம்
உடலில் குளுக்கோஸ் சகிப்புத்தன்மையை மேம்படுத்த வெந்தயம் உதவுகிறது. இதில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. செரிமானம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/ginger.jpg)
5. இஞ்சி
இஞ்சி பல நூற்றாண்டுகளாக சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இஞ்சியில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. உண்மையில் இன்சுலின் சுரப்பைக் கட்டுப்படுத்துவதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. “தினமும் டீயில் இஞ்சியை சேர்த்து சாப்பிடலாம் அல்லது இஞ்சி-மஞ்சள் பால் என்று கலந்து சாப்பிடலாம். முக்கியமாக இஞ்சி பச்சையாக இருக்க வேண்டும். அதே போல, உலர்ந்த இஞ்சி சுக்கு பொடியையும் உட்கொள்ளலாம்” என்று சுகரைக் கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.