சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் முயற்சியில், நீரிழிவு நோயிலிருந்து விடுதலை (FFD) என்ற அமைப்பைச் சேர்ந்த வீரநாராயணன் குல்கர்னி, காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணம் மேற்கொள்கிறார். செவ்வாய்க்கிழமை காலை புனேவில் உள்ள பிரபாத் சாலையில் உள்ள FFD கிளினிக்கிள் இருந்து இவர் தனது பயணத்தை தொடங்கினார்..
இந்த நிகழ்ச்சியில் FFD நிறுவனர் டாக்டர் பிரமோத் திரிபாதி கலந்து கொண்டார். வீரநாராயண் குல்கர்னி கூறுகையில், சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வை பரப்புவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். மக்கள் தங்களின் வாழ்க்கை முறை, உடற்பயிற்சி, சரியான உணவு உண்பது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் நொறுக்குத் தீனிகளை தவிர்க்க வேண்டும்.
வீரநாராயண், 40 நாட்களில் 4,000 கிமீ தூரம் சைக்கிள் ஓட்டுவார்.
FFD இன் பத்து ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வில் இந்த முயற்சி புனேவில் அதிகாரப்பூர்வமாக கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வை பரப்பும் முயற்சியை டாக்டர் திரிபாதி பாராட்டினார். உலகத்தின் நீரிழிவு தலைநகராக இந்தியா மாறிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டவர்கள் கவலைப்பட வேண்டாம். அதற்கு பதிலாக அவர்கள் மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களைக் கலந்தாலோசித்து, குறிப்பிடத்தக்க வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் அதை எதிர்த்துப் போராட வேண்டும். “நீரிழிவு நோய்க்கு உண்மையான வழி இதுதான்,” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“