ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட உடல் வாசனை இருக்கும். இது பொதுவாக உங்கள் தோலில் உள்ள பாக்டீரியா மற்றும் வியர்வையின் கலவையால் ஏற்படுகிறது.
ஹார்மோன்கள், உணவுப் பழக்கவழக்கங்கள், நோய்த்தொற்றுகள், மருந்துகள் அல்லது நீரிழிவு போன்ற அடிப்படை நிலைமைகள் காரணமாகவும் உடல் துர்நாற்றம் இருக்கலாம்.
நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், உடல் துர்நாற்றத்தில் ஏற்படும் பாரிய மாற்றம், உயர் இரத்த சர்க்கரை தொடர்பான கெட்டோஅசிடோசிஸின் அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் நம்புகின்றனர். உடலில் உள்ள அதிக கீட்டோன் அளவுகள், உங்கள் இரத்தத்தில் அதிக அமிலத்தன்மையை உண்டாக்குகிறது, இது ஒரு பழத்தின் வாசனை போன்று இருக்கும்.
உங்கள் இரத்த சர்க்கரை 240 mg/dL அல்லது அதற்கு மேல் இருந்தால், உங்கள் இரத்தத்தில் கீட்டோன்கள் இருக்கிறதா என்று சோதிக்க, சிறுநீர் சோதனை செய்யவும்.
இது ஒவ்வொரு 4 முதல் 6 மணி நேரத்திற்கும் செய்யப்பட வேண்டும். டயாபட்டீஸ் கெட்டோஅசிடோசிஸின், ஏதேனும் அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால், நீங்கள் கீட்டோன்களை சோதிக்க வேண்டும்.
உயர் இரத்த சர்க்கரை எவ்வாறு கடுமையான வாசனையை ஏற்படுத்துகிறது?
உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கும்போது, இரத்த சர்க்கரையை ஆற்றலாகப் பயன்படுத்த உங்கள் செல்களுக்குள் அனுமதிக்க, போதுமான இன்சுலின் உடலில் இருக்காது. உங்கள் கல்லீரல் கொழுப்பை உடைக்கிறது, இது கீட்டோன்கள் எனப்படும் அமிலங்களை உருவாக்குகிறது.
அதிகப்படியான கீட்டோன்கள் உற்பத்தி செய்யப்படும்போது, அவை உங்கள் இரத்தத்திலும் சிறுநீரிலும் ஆபத்தான அளவுகளை உருவாக்கலாம், இதனால் இரத்தம் அமிலமாக மாறும்.
கீட்டோன்கள் நம் சுவாசம் மற்றும் வியர்வை மூலம் உடலை விட்டு வெளியேறுகிறது, இது இந்த நாற்றங்களுக்கு வழிவகுக்கிறது.
இதை எப்படி சரிசெய்வது?
உங்கள் இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து மற்றும் தவறாமல் பரிசோதிப்பதே நிலைமையை கவனித்துக் கொள்வதற்கான சிறந்த வழி என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
நீரிழிவு நோயின் அறிகுறிகளையும் கவனித்து, மருத்துவ ஆலோசனைக்கு உங்கள் மருத்துவரை அணுகவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“