ஆரோக்கியமான ரத்த சர்க்கரை அளவை பராமரிப்பது நீரிழிவு நோயை நிர்வகிப்பதற்கான ஒரு முக்கிய பகுதியாகும். கட்டுப்பாடில்லாமல் விட்டால், இது சில கடுமையான சிக்கல்களுக்கு பங்களிக்கும். இருப்பினும், பலர் தினசரி அடிப்படையில் அறியாமல் சிறிய தவறுகளை செய்கிறார்கள், அது உங்கள் ரத்த சர்க்கரை அளவை மோசமாக்கும். நீரிழிவு நோயை நிர்வகிப்பதில் உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறை முக்கிய பங்கு வகிக்கிறது.
உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் நீங்கள் தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள் குறித்து, ஊட்டச்சத்து நிபுணர் என்மாமி அகர்வால் பகிர்ந்து கொண்டார்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
கெட்ச்அப், கார்ன்ஃப்ளேக்ஸ் மற்றும் பிஸ்கட் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சர்க்கரை (hidden sugars) உள்ளன. இவை ஆரோக்கியமற்றவை. எனவே, ஆரோக்கியமான, வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
வீட்டிலேயே தின்பண்டங்களைத் தயாரிப்பது அதிகப்படியான சர்க்கரையைத் தவிர்க்க உதவும்.
உட்கார்ந்த வாழ்க்கை முறை
உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது. நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் இது உதவும். ஒரே இடத்தில் உட்கார்ந்த வாழ்க்கை முறை எடை அதிகரிப்பு மற்றும் இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்தும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு நடைபயிற்சி அல்லது யோகா நல்லது. நீங்கள் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டியதில்லை.
/indian-express-tamil/media/media_files/lO7tSCpRdirvlR92HgQr.jpg)
கிளைசெமிக் இண்டெக்ஸ் (GI) உணவுகள்
ஹை கிளைசெமிக் இண்டெக்ஸ் (GI) உணவுகள் சாப்பிடும் போது ரத்த சர்க்கரை அளவு விரைவான உயரும். மறுபுறம், குறைந்த GI கொண்ட உணவுகள் உங்கள் ரத்த சர்க்கரை அளவுகளில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, ரத்த ஓட்டத்தில், நிலையான குளுக்கோஸ் வெளியீட்டிற்கு, உணவுகளை உட்கொள்ளும் முன் அவற்றின் GI மதிப்பை சரிபார்க்கவும்
நார்ச்சத்து
நார்ச்சத்து பல வழிகளில் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. இது நீரிழிவு மேலாண்மைக்கும் உதவும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது ரத்த சர்க்கரையை உறுதிப்படுத்தவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் மற்றும் ஆரோக்கியமான குடலை ஊக்குவிக்கவும் உதவும்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது ரத்த சர்க்கரையை உறுதிப்படுத்தவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் மற்றும் ஆரோக்கியமான குடலை ஊக்குவிக்கவும் உதவும்.
முழு தானியங்கள், பழங்கள், நட்ஸ், காய்கறிகள் மற்றும் விதைகள் போன்ற அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உங்கள் உணவில் சேர்க்கவும். இவை, ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவும்.
சீரான உணவு, வழக்கமான உடல் செயல்பாடு சிறந்த ரத்த சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு பங்களிக்கும், என்று என்மாமி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“