இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த நீரிழிவு மேலாண்மை முக்கியமானது.
எனவே, நீரிழிவு நோயாளிகளின் குளுக்கோஸ் அளவைப் பாதிக்கக்கூடிய நிலைமைகளைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். அதிலும் குளிர்காலம் நீரிழிவு நோயாளிகளுக்கு சில சவால்களை முன்வைக்கிறது.
கடுமையான குளிர், உங்கள் குளுக்கோஸ் அளவை பாதிப்பதுடன், அது தவறான அளவீடுகளுக்கும் வழிவகுக்கும். குளிர்காலம் நம்மை மந்தமாக ஆக்குகிறது, இதன் காரணமாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடும்.
குளிர்காலத்தில் மிகவும் மந்தமாக இருப்பது பொதுவானது, ஆனால் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை மற்றும் நீரிழிவு நிலை உள்ளவர்கள் தங்கள் உடல் செயல்பாடுகளைத் தவிர்க்கக்கூடாது. சர்க்கரை நுகர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
ரேனாடின் நிகழ்வு
நீரிழிவு நோயாளிகளும் ரேனாடின் நிகழ்வை (Raynaud’s phenomenon) பற்றி அறிந்திருக்க வேண்டும், இது ஒரு ஆட்டோ இம்யூன் நிலை.
இது முக்கியமாக குளிர் காலநிலையில் கைகள் மற்றும் கால்களில் இரத்த நாளங்கள் சுருங்கும்போது ஏற்படுகிறது. இதன் அறிகுறிகளில் விரல்கள் மற்றும் கால்விரல்களில் உணர்வின்மை மற்றும் குளிர்ச்சி ஆகியவை அடங்கும்
குளிர்காலத்தில் தவறான ரீடிங்.. எவ்வாறு சமாளிப்பது?
வெப்பநிலையில் வீழ்ச்சி நீரிழிவு அளவிடும் கருவிகளின் செயல்பாட்டை பாதிக்கலாம், இது தவறான ரீடிங்-க்கு வழிவகுக்கும்.
கடுமையான குளிரில் குறைந்த இரத்த ஆக்ஸிஜன் அளவு மற்றும் மோசமான இரத்த ஓட்டத்தின் வாய்ப்புகள் காரணமாக, பரிசோதனைக்கான டயாபட்டீஸ் ஸ்ட்ரிப் துல்லியமாக வேலை செய்யாமல் போகலாம்.
இரத்த சர்க்கரை அளவை துல்லியமாக அளவிடுவதற்கு, உடலின் வெப்பநிலை நிலையானதாக இருக்க வேண்டும். குளிர்ந்த காலநிலையில் இரத்த சர்க்கரை அளவை பதிவு செய்யும் போது, பரிசோதனைக்கு முன் எப்போதும் உங்கள் கைகளை சூடாக வைத்துக் கொள்ளுங்கள்.
கடுமையான குளிர் இன்சுலின்களையும் பாதிக்கலாம். எனவே, குளிர்காலத்தில் ஒருவர் சர்க்கரை நோய்க்கான மருந்துகள், பரிசோதனை பொருட்கள் மற்றும் இன்சுலின்களை நிலையான வெப்பநிலையில் வைத்திருப்பது முக்கியம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“