சுகர் பேஷண்ட்ஸ் முந்திரி சாப்பிட்டா பிளட் சுகர் அதிகரிக்குமா? மருத்துவ நிபுணர் என்ன சொல்கிறார்?

ரொட்டி, பாஸ்தா போன்ற அதிக கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளுடன் ஒப்பிடும்போது இது ரத்த சர்க்கரை அளவை குறைவாகவோ அல்லது மிதமாகவோ உயர்த்துகிறது.

ரொட்டி, பாஸ்தா போன்ற அதிக கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளுடன் ஒப்பிடும்போது இது ரத்த சர்க்கரை அளவை குறைவாகவோ அல்லது மிதமாகவோ உயர்த்துகிறது.

author-image
WebDesk
New Update
Diabetes health cashew nuts

Diabetes health cashew nuts

முந்திரி பருப்பு அதன் வளமான கிரீமி சுவைக்கும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதாலும் பலராலும் விரும்பப்படுகிறது. இதில் உள்ள மேக்ரோநியூட்ரியன்களின் சரியான கலவைதான் அதை தனித்துவமாக்குகிறது. 
ஆனால், முந்திரி சாப்பிடுவது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்குமா?

Advertisment

"ஒரு சிறிய கிண்ணம் (75 கிராம்) முந்திரி சாப்பிடுவது ரத்த சர்க்கரை அளவை மிதமாகவே உயர்த்தும்," என்கிறார் மருத்துவ உணவியல் நிபுணர் கரிமா கோயல். (clinical dietitian Garima Goyal.)

எப்படி?

கார்போஹைட்ரேட் உள்ளடக்கம் மற்றும் கிளைசெமிக் குறியீடு (GI)

Advertisment
Advertisements

75 கிராம் முந்திரியில் சுமார் 20 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன (low carbohydrate density). இதில் 3 கிராம் நார்ச்சத்து அடங்கும், நிகர கார்போஹைட்ரேட் அளவு 17 கிராம் மட்டுமே.

இருப்பினும், 75 கிராம் முந்திரியின் கலோரி மதிப்பு 440 கிலோகலோரிகள் என்று கோயல் கூறுகிறார். இதன் பொருள், இந்த அதிக கலோரி மதிப்புக்கு கார்போஹைட்ரேட்டுகள் காரணம் இல்லை. ரொட்டி, பாஸ்தா போன்ற அதிக கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளுடன் ஒப்பிடும்போது இது ரத்த சர்க்கரை அளவை குறைவாகவோ அல்லது மிதமாகவோ உயர்த்துகிறது.
மேலும், முந்திரி குறைந்த கிளைசெமிக் குறியீட்டை (GI 22) கொண்டுள்ளது (குறைந்த GI உணவுகள் 55க்கும் குறைவான GI மதிப்பைக் கொண்டிருக்கும்). குறைந்த கார்போஹைட்ரேட் உள்ளடக்கம் முந்திரி ப
ருப்புகளை குறைந்த கிளைசெமிக் லோடு (GL) வகையிலும் வைக்கிறது.

கோயலின் கூற்றுப்படி, குறைந்த GI மற்றும் GL ஆகியவை நீரிழிவு நோயாளிகளுக்கு கிளைசெமிக் கட்டுப்பாட்டைப் பொறுத்தவரை நல்ல தேர்வாக அமைகிறது.

அதிக புரதம் மற்றும் கொழுப்பு உள்ளடக்கம்

முந்திரியில் கணிசமான அளவு புரதம் மற்றும் கொழுப்புச்சத்து (முறையே 14 கிராம் மற்றும் 34 கிராம்) உள்ளது. "இந்த ஊட்டச்சத்துக்கள் ரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த சிறந்தவை, ஏனெனில் அவை செரிமானத்தை மெதுவாக்கி, பசியை கட்டுப்படுத்துவதன் மூலம் அதிகப்படியான உணவு உட்கொள்வதைத் தடுக்கின்றன. கொழுப்பு விகிதத்தில் அதிக அளவு ஒலிக் அமிலம் உள்ளது, இது ஒரு சிறந்த அழற்சி எதிர்ப்பு கலவை ஆகும். மேலும், குறைந்த கார்போஹைட்ரேட்-டு-கொழுப்பு விகிதம் நீரிழிவு நோயாளிகளுக்கு வளர்சிதை மாற்றக் கட்டுப்பாட்டிற்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது," என்று கோயல் கூறினார்.

ரத்த சர்க்கரை அதிகரிப்பைப் பொறுத்தவரை இதைக் கவனியுங்கள்

மெக்னீசியத்தின் செழுமை

மெக்னீசியம், குளுக்கோஸ் வளர்சிதை மாற்றம் மற்றும் இன்சுலின் உணர்திறனில் (glucose metabolism and also insulin sensitivity) குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. ரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த இன்சுலின் ஹார்மோனை சிறப்பாகப் பயன்படுத்த உடல் செல்களுக்கு மெக்னீசியம் உதவுகிறது,"என்று கோயல் கூறினார்.

நீரிழிவு நோயாளிகளுக்கு இது அவசியமா?

Diabetes

ஒரு சிறிய கிண்ணம் முந்திரி ரத்த சர்க்கரை அளவை மிதமாக உயர்த்தினாலும், நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ளும் அளவுகளில் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் அதிகமாக உட்கொள்ளக்கூடாது. அதிகமாக சாப்பிடுவது சர்க்கரை அளவை கணிசமாக பாதிக்காவிட்டாலும், அது கலோரிகளை அதிகரித்து உடல் எடையை அதிகரிக்கக்கூடும். பெரிய அளவில் உட்கொண்டால், ரத்த சர்க்கரை உயர்வை சமநிலைப்படுத்த காய்கறி சாலட், தயிர் போன்ற நார்ச்சத்து அல்லது புரதம் நிறைந்த உணவுகளுடன் முந்திரியை சேர்த்துக்கொள்ளவும், என்று கோயல் கூறினார்.

Read in English: Diabetics, here’s what happens to blood sugar levels if you have a small bowl of cashew nuts or kaju

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: