/indian-express-tamil/media/media_files/2025/04/23/v5T23LHBQ74y0EviL5sc.jpg)
Diabetes walking Excersise
மரபு வழி, முறையற்ற உணவுப்பழக்கம், அதிகப்படியான மன அழுத்தம், ஹார்மோன் மாற்றம், உடல் பருமன் என பல காரணங்களால் ஒருவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படலாம்.
உடலில் சர்க்கரையின் அளவு சீராக இல்லாததை நோய் எனச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. தினசரி உடற்பயிற்சி, சமச்சீர் உணவு என வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்தாலே ஆரோக்கியமாக வாழலாம்.
தினமும் காலையில் சரியான நேரத்தில் எழுவது, உடற்பயிற்சி மேற்கொள்வது, சமச்சீர் உணவு என முறையான வாழ்க்கையைக் கடைப்பிடிப்பது அவசியம்.
சர்க்கரை நோயை டைப் - 1, டைப் - 2 , என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். டைப் - 1 என்பது, உடல் இன்சுலினை முற்றிலும் சுரக்காத நிலை. இது பெரும்பாலும் குழந்தைகளுக்கே ஏற்படும். பெரும்பாலானோர் பாதிக்கப்படுவது டைப் - 2 சர்க்கரை நோயில் தான். உடலானது இன்சுலினை உற்பத்தி செய்யும். ஆனால் அது குறைந்த அளவாகவோ, தேவையான ஆற்றல் இல்லாததாகவோ இருக்கும்.
இரண்டு வகையான சர்க்கரை நோய் பாதிப்பிற்கும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்வது, உணவுக் கட்டுப்பாடு போன்றவை அவசியமென்று மருத்துவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
சர்க்கரை நோயாளிகள் என்ன மாதிரியான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்? அதை எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து டாக்டர் கார்த்திகேயன் தன்னுடைய யூடியூப் வீடியோவில் கூறுகிறார்…
சாப்பிட்ட பிறகு நடப்பதால் தசை, செல்கள் செயல்படும். அதற்கு குளுக்கோஸ் தேவைப்படும். உணவிலிருந்து நம் உடலுக்கு கிடைத்த குளுக்கோஸ் உடல் உறுப்புகளுக்குச் செல்வதால் ரத்தத்தில் சேரும் குளுக்கோஸ் அளவு குறைவாக இருக்கும். எனவேதான் சாப்பிட்ட பின் நடைப்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
எனவே குறைந்தது 20 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும். அதே நேரம் இதயநோய் இருப்பவர்கள் நடைப்பயிற்சியைத் தவிர்ப்பது நல்லது.
அதேபோல கால்களில் புண்கள் இருப்பவர்கள், கால் நரம்புகளில் பாதிப்புள்ளவர்கள், கர்ப்பிணிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயால் கண் பாதிப்பு அதிகமுள்ளவர்கள் போன்றோர் வாக்கிங்கை தவிர்க்கலாம். இப்படிப்பட்டவர்கள் வீட்டிலேயே யோகா, தியானம் போன்றவற்றைச் செய்யலாம்.
உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு உணவுக் கட்டுப்பாடு எந்த அளவுக்கு அவசியமோ அதேபோல் மருத்துவர் அறிவுறுத்தும் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வதும் அவசியம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us