Advertisment

வாரத்திற்கு 2 1/2 மணி நேரம் ஏரோபிக்... சுகர் பிரச்னையை அடக்கி வைக்க வழி இருக்கு!

இந்திய தேசிய சித்த மருத்துவ அமைப்பு (NHS) ஒரு வாரத்திற்கு 2.5 மணிநேர ஏரோபிக் செயல்பாட்டில் ஈடுபட பரிந்துரைக்கிறது, இதில் வேகமாக நடப்பது மற்றும் படிக்கட்டுகளில் ஏறுவது போன்ற செயல்பாடுகள் அடங்கும்.

author-image
WebDesk
Nov 01, 2022 12:57 IST
New Update
Diabetes management

Aerobic for Diabetes

நாம் சாப்பிடும்போது, ​நமது உடல் கார்போஹைட்ரேட்டை சர்க்கரையாக (குளுக்கோஸ்) உடைக்கிறது. கணையத்தில் உற்பத்தி செய்யப்படும் இன்சுலின் என்ற ஹார்மோன், பின்னர் ஆற்றலுக்காக அந்த சர்க்கரைகளை உறிஞ்சுவதற்கு நமது உடல் செல்களை அறிவுறுத்துகிறது.

Advertisment

கொரோனாவால் அதிகரிக்கும் நீரிழிவு பிரச்சனை, 7.7 கோடி இந்தியர்களை பாதித்து உள்ளது. கொரோனா பாதிப்பில்  சுமார் 17% பேர்  நீரிழிவு  பாதிப்புக்கு  ஆளாகி உள்ளனர்.

அதற்கு காரணம், ஆங்கில மருத்துவம் steroids,  antibacterial, antiviral  மருந்துகள் கணைய செயல் இழப்புக்கு ஆக்குகிறது.

இன்சுலின் உற்பத்தி செய்யப்படாமல் அல்லது சரியாக வேலை செய்யாத போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது, இதனால் நமது இரத்தத்தில் சர்க்கரை சேருகிறது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகள் நமது ரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கின்றன.

நீரிழிவு நோயின் வகைகள் என்ன?

நீரிழிவு நோயில் பல வகைகள் உள்ளன.

டைப் 1 நீரிழிவு நோயில், கணையம் இன்சுலின் உற்பத்தி செய்வதை நிறுத்துகிறது, எனவே குளுக்கோஸ் இரத்த ஓட்டத்தில் குவிகிறது.

இது ஏன் நிகழ்கிறது என்று மருத்துவ விஞ்ஞானிகளுக்கு சரியாகத் தெரியவில்லை, ஆனால் இது மரபணு ரீதியிலான தாக்கத்தை கொண்டிருக்கலாம் அல்லது கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை சேதப்படுத்தும் வைரஸ் தொற்றுகளின் விளைவாக இருக்கலாம்.

publive-image

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 10 சதவீதம் பேருக்கு டைப் 1 பாதிப்பு உள்ளது.

டைப் 2 நீரிழிவு நோயில், கணையம் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யாது, அல்லது ஹார்மோன் திறம்பட செயல்படாது.

இன்சுலின் என்பது கணையத்தில் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன் ஆகும், இது நமது உடல் குளுக்கோஸை உறிஞ்சுவதற்கு உதவுகிறது

இது பொதுவாக நடுத்தர வயது மற்றும் முதியவர்கள், அதிக எடை மற்றும் உட்கார்ந்த நிலையில் இருக்கும் இளைஞர்கள் மற்றும் சில குறிப்பிட்ட இனங்களைச் சேர்ந்த தனிநபர்கள், குறிப்பாக தெற்காசியர்கள் ஆகியோருக்கு நிகழ்கிறது.

சில கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்பகால நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்படலாம், ஏனெனில் அவர்களின் உடலால் அவர்களுக்கும் குழந்தைக்கும் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாது.

பல்வேறு ஆய்வுகள் 6 முதல் 16 சதவிகித கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்பகால நீரிழிவு நோய் உருவாகும் என்று மதிப்பிடுகின்றன. கர்ப்பிணிகள் தங்களுடைய சர்க்கரை அளவை உணவு, உடல் செயல்பாடு மற்றும்/அல்லது இன்சுலின் பயன்பாடுகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும், இது டைப் 2 ஆக மேம்படுவதை தடுக்கிறது.

ரத்தத்தில் குளுக்கோஸின் அதிகரித்த அளவு மற்றும் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும் நிலையை நீரிழிவுக்கு முந்தைய பரிசோதனை மூலம் மக்கள் கண்டறியலாம்.

நீரிழிவு நோயின் அறிகுறிகள்

மிகவும் சோர்வு, தொடர்ந்து தாகம் எடுப்பது மற்றும் வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழிப்பது ஆகியவை நீரிழிவு நோயின் அறிகுறிகளாகும்

மிகவும் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

மிகவும் தாகமாக உணர்வது. • வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழித்தல், குறிப்பாக இரவு நேரங்களில்.• மிகவும் சோர்வாக உணர்வது • உடல் எடை குறைதல்.• வாய்ப்புண் அடிக்கடி ஏற்படுதல்• மங்கலான பார்வை.• குணமடையாத வெட்டு காயங்கள் மற்றும் ரத்த காயங்கள்

இந்திய தேசிய சித்த மருத்துவ சேவையின் கூற்றுப்படி டைப் 1 நீரிழிவு நோயின் அறிகுறிகள் குழந்தைப் பருவத்திலோ இளமைப் பருவத்திலோ தோன்றும். மிகவும் கடுமையானதாக இருக்கும்.

டைப் 2 ஆபத்தில் உள்ளவர்கள் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் (அல்லது தெற்காசிய மக்களுக்கு 25 வயதுக்கு மேல்); நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோர் அல்லது உடன்பிறந்தவர்கள்; அதிக எடை அல்லது பருமனானவர்கள்; மற்றும் தெற்காசிய, சீன, ஆப்ரோ-கரீபியன் அல்லது கருப்பின ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது.

நீரிழிவு நோயைத் தடுக்க

நீரிழிவு மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளைப் பொறுத்தது, ஆனால் ஆரோக்கியமான உணவு மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை மூலம் உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவலாம்.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் தானியங்களுக்கு பதிலாக பழங்கள் மற்றும் முழு தானியங்களுக்கு மாறுவதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம்.

பதப்படுத்தப்பட்ட சர்க்கரை உணவுகள் மற்றும் பானங்களைத் தவிர்ப்பது மற்றும் முழு உணவுக்காக வெள்ளை ரொட்டி மற்றும் பாஸ்தாவை மாற்றுவது ஒரு நல்ல முதல் படியாகும்.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் ஊட்டச்சத்துக்கு உதவாது. ஏனெனில் அவற்றின் நார்ச்சத்து, வைட்டமின் நிறைந்த பாகங்கள் ஏற்கெனவே அகற்றப்பட்டிருக்கும்.

உதாரணமாக வெள்ளை மாவு, வெள்ளை ரொட்டி, வெள்ளை அரிசி, வெள்ளை பாஸ்தா, பேஸ்ட்ரிகள், ஃபிஸி/சர்க்கரை பானங்கள், இனிப்புகள் மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட காலை உணவு தானியங்களை கூறலாம்.

ஆரோக்கியமான உணவு வகைகளில் காய்கறிகள், பழங்கள், பீன்ஸ் மற்றும் முழு தானியங்கள் அடங்கும். மத்தி, சால்மன் மற்றும் கானங்கெளுத்தி போன்ற மீன்கள், ஆரோக்கியமான எண்ணெய்கள், கொட்டைகள் மற்றும் ஒமேகா-3 மீன் எண்ணெய் போன்றவை அடங்கும். சீரான இடைவெளியில் சாப்பிடுவதும், பசியாறியதும் சாப்பிடும் அளவை நிறுத்துவதும் மிக முக்கியம்.

உடற்பயிற்சி செய்வதன் மூலம் உங்களுடைய ரத்த சர்க்கரை அளவு குறையலாம்.

இந்திய தேசிய  சித்த மருத்துவ அமைப்பு (NHS) ஒரு வாரத்திற்கு 2.5 மணிநேர ஏரோபிக் செயல்பாட்டில் ஈடுபட பரிந்துரைக்கிறது, இதில் வேகமாக நடப்பது மற்றும் படிக்கட்டுகளில் ஏறுவது போன்ற செயல்பாடுகள் அடங்கும்.

உட்கார்ந்த வாழ்க்கை முறையைத் தவிர்ப்பது நல்லது. மேலும் வாரத்திற்கு குறைந்தது 2.5 மணி நேரமாவது சுறுசுறுப்பாக இருப்பது முக்கியம்.

ஆரோக்கியமாக உடல் எடை இருந்தால் உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதை எளிதாக்கும். நீங்கள் எடை இழக்க வேண்டும் என்றால், மெதுவாக அதை செய்ய முயற்சி செய்யுங்கள், வாரத்திற்கு 0.5 கிலோ முதல் 1 கிலோ வரை என தொடங்குங்கள்.

இதய நோய் அபாயத்தைக் குறைக்க புகைப்பிடிக்காமல் இருப்பதும், கொலஸ்ட்ரால் அளவைக் கண்காணிப்பதும் முக்கியம்.

நீரிழிவு நோயின் சிக்கல்கள்

ரத்த ஓட்டத்தில் அதிக அளவு சர்க்கரை இரத்த நாளங்களை கடுமையாக சேதப்படுத்தும்.

உங்கள் உடலில் ரத்தம் சரியாக ஓடவில்லை என்றால், அது உடலின் தேவையான பாகங்களை அடையாது, நரம்பு சேதம் (உணர்வு மற்றும் வலி இழப்பு), பார்வை இழப்பு மற்றும் கால் தொற்று ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கும்.

குருட்டுத்தன்மை, சிறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் கீழ் மூட்டுகள் துண்டிக்கப்படுவதற்கு நீரிழிவு ஒரு முக்கிய காரணம் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

தகவல் உதவி: மருத்துவர் முத்துக்குமார், சித்த மருத்துவ சிறப்பு நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர், வாட்ஸ் அப் தொடர்பு எண் 9344186480

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment