Why diabetics should not ignore tingling sensation?
சிறுநீரக பிரச்சனைகள், இரத்தக்குழாய் மற்றும் இதய நோய்கள் தவிர நீரிழிவு நோயுடன் தொடர்புடைய சுகாதார சிக்கலான 'பெரிஃபெரல் நியூரோபதி' அதாவது புற நரம்பியல் பற்றி நீரிழிவு நோயாளிகள் தெரிந்து கொள்வது அவசியம்.
Advertisment
புற நரம்பியல் என்றால் என்ன?
புற நரம்பியல் (peripheral neuropathy) பாதிப்பானது, புற நரம்புகள் சேதமடைவதால், கூச்ச உணர்வு, கை மற்றும் கால்களில் உணர்வின்மை போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்று டாக்டர் சச்சின் பவார் விளக்குகிறார்.
நமது புற நரம்புகள் நமது உடலில் பல்வேறு உணர்வு மற்றும் தன்னியக்க செயல்பாடுகளுக்கு உதவுகின்றன. புற நரம்பியல் நோய், ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்காவிட்டால், அது நீண்டகால வலி, உணர்வு இழப்பு மற்றும் மீளமுடியாத நரம்பு சேதம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
Advertisment
Advertisements
ஆய்வுகளின்படி, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் தங்கள் வாழ்நாளில் புற நரம்பியல் நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று அவர் கூறுகிறார்
அறிகுறிகள்
மருத்துவரின் கூற்றுப்படி, இந்த நிலைக்கான மருத்துவ அறிகுறிகள் நபருக்கு நபர் வேறுபடுகின்றன. சிலர் அறிகுறியற்றவர்களாக இருந்தாலும், மற்றவர்கள் கடுமையான நரம்பியல் வலி அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள், என்று அவர் கூறுகிறார்.
கூச்ச உணர்வு, உணர்வின்மை, கை மற்றும் கால்களில் எரிச்சல் மற்றும் குத்துதல் போன்ற உணர்வுகள், மற்றும் நீரிழிவு புற நரம்பியல், கால் புண்களுக்கு வழிவகுக்கலாம், இது வழக்கமான ஸ்கிரீனிங் மற்றும் சிகிச்சையை அவசியமாக்குகிறது என்று டாக்டர் பவார் கூறுகிறார்.
அடிக்கடி அனுபவிக்கும் கவலை, மனச்சோர்வு மற்றும் தூக்கக் கோளாறுகள் போன்ற அறிகுறிகளை கவனிக்காமல் இருந்தால் அவை வாழ்க்கைத் தரத்தை சீர்குலைக்கும்.
நீரிழிவு நோயாளிகளில் புற நரம்பியல்
டாக்டர் பவாரின் கூற்றுப்படி, கடந்த காலத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள், 50 சதவிகிதம் வரை நீரிழிவு புற நரம்பியல் நோயாளிகள் அறிகுறியற்றவர்கள் என்று கூறுகின்றன, இதன் காரணமாக இந்த நிலை கண்டறியப்படாமல் உள்ளது மற்றும் உணர்ச்சியற்ற காயத்திற்கு வழிவகுக்கிறது.
சரியான நேரத்தில் கண்டறிதல் ஏன் முக்கியம்
ஆரம்பகால தலையீடு நோயாளியின் பராமரிப்பை மேம்படுத்துவதற்கும் சுகாதாரச் செலவுகளைக் குறைப்பதற்கும் முக்கியமாகும். இந்த நிலை குறித்த விழிப்புணர்வை பரப்புவது காலத்தின் தேவையாகும், ஏனெனில் இந்த அறிகுறிகள் பெரும்பாலும் நோயாளிகளால் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை, என்று மருத்துவர் கூறுகிறார்.
அறிகுறிகளைக் கவனிப்பது, ஆரம்ப கட்டத்தில் மருத்துவ ஆலோசனையைப் பெறுதல் மற்றும் வழக்கமான ஸ்கிரீனிங் ஆகியவை நிலைமையை "மீள முடியாத நிலைக்கு" வர விடாமல் பார்த்துக் கொள்ளும் என்று அவர் மேலும் கூறுகிறார்.
நியூரோட்ரோபிக் பி வைட்டமின்கள் புற நரம்பியல் நோயை நிர்வகிப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் அவை அறிகுறிகளின் தொடக்கத்தை தாமதப்படுத்தும் மற்றும் நரம்பு செயல்பாட்டை மேம்படுத்தும் திறன் கொண்டவை. இந்த வைட்டமின்கள் சேதமடைந்த நரம்புகளை சரிசெய்வதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன என்று டாக்டர் பவார் விளக்குகிறார்.
நமது வாழ்க்கை முறை - உணவு உட்கொள்ளல், வழக்கமான உடல் செயல்பாடு ஆகியவற்றை உன்னிப்பாகக் கண்காணிப்பதைத் தவிர, நிலைமையை நன்றாகப் புரிந்துகொள்ள மருத்துவரை அணுகுமாறு டாக்டர் சச்சின் பவார் பரிந்துரைக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“