/indian-express-tamil/media/media_files/2025/06/25/urine-smell-2025-06-25-16-44-38.jpg)
Is sweet smelling urine a sign of high blood sugar levels
உங்களுக்குத் தெரியுமா, உங்கள் சிறுநீரின் மணம் கூட உங்கள் உடல்நிலையைப் பற்றி சில முக்கிய தகவல்களைத் தரக்கூடும் என்று? ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கான நிபுணர் ஆலோசனைகள், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புள்ளவர்கள் (prediabetics) தெரிந்து கொள்ள வேண்டியவை, மற்றும் இன்சுலின் செடி குறித்த தவறான நம்பிக்கைகள் குறித்து நாம் பேசியுள்ள நிலையில், இன்று நாம் மற்றொரு முக்கியமான கேள்விக்கு விடை தேட உள்ளோம். இனிப்பான மணம் கொண்ட சிறுநீர், உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகரித்திருப்பதற்கான அறிகுறியா?
மும்பை வொக்கார்ட் மருத்துவமனைகளின் ஆலோசகர் எண்டோகிரைனாலஜிஸ்ட் மற்றும் நீரிழிவு நிபுணர் டாக்டர் பிரணவ் கோடி கூறுகையில், இனிப்பான மணம் கொண்ட சிறுநீர் உயர் ரத்த சர்க்கரை அளவுகளின் அறிகுறியாக இருக்கலாம், குறிப்பாக நீரிழிவு நோய் கண்டறியப்படாத அல்லது சரியாகக் கட்டுப்படுத்தப்படாத நபர்களுக்கு இது பொருந்தும் என்றார். "இரத்தத்தில் அதிகப்படியான குளுக்கோஸ் சேரும்போது, உடல் அதை சிறுநீர் மூலம் வெளியேற்ற முயற்சிக்கிறது. இது சிறுநீரில் தனித்துவமான இனிப்பு அல்லது பழ வாசனையை ஏற்படுத்தும்" என்று டாக்டர் கோடி விளக்கினார்.
டாக்டர் கோடியின் கூற்றுப்படி, இந்த மணம் கீட்டோன்கள் காரணமாகவும் இருக்கலாம். கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோயில், ஆற்றலுக்காக உடல் கொழுப்பை உடைக்கும்போது கீட்டோன்கள் உருவாகின்றன. "சில சமயங்களில், இது நீரிழிவு கீட்டோஅசிடோசிஸ் (DKA) என்பதைக் குறிக்கலாம். இது உயிருக்கு ஆபத்தான சிக்கலாகும், இதற்கு அவசர மருத்துவ உதவி தேவை".
அதிகப்படியான தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சோர்வு அல்லது திடீர் எடை இழப்பு போன்ற அறிகுறிகளுடன் இனிப்பான மணம் கொண்ட சிறுநீர் இருந்தால், உடனடியாக ரத்த சர்க்கரை அளவை பரிசோதிப்பது அவசியம்.
"ஆரம்பகால கண்டறிதல், கடுமையான சிக்கல்களைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது" என்று டாக்டர் கோடி தெரிவித்தார்
தேசிய சுகாதார சேவை (NHS) அமைப்பின் கூற்றுப்படி, சிறுநீரில் ரத்தம், அடிவயிற்று அல்லது முதுகுவலி, பொதுவான சோர்வு மற்றும் உடல்நலக்குறைவு உணர்வு, அதிக வெப்பநிலை, காய்ச்சல் மற்றும் நடுக்கம், குழப்பம் அல்லது விளக்க முடியாத மனக்கிளர்ச்சி போன்றவற்றுடன் துர்நாற்றம் வீசும் சிறுநீர் இருந்தால் மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Read in English: Is sweet smelling urine a sign of high blood sugar levels?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.