Advertisment

சுகர் பேஷண்ட்ஸ் பிளீஸ் நோட்! ரத்த சர்க்கரை அளவு இவ்வளவு இருந்தா அதிக ஆபத்து

300 mg/dL க்கும் அதிகமாக இருந்தால், உங்கள் ரத்த சர்க்கரை அளவை பாதுகாப்பான வரம்பிற்குள் பெற உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்.

author-image
WebDesk
New Update
Diabetes

Dangerous Blood Sugar Levels in Diabetes

இந்திய மருத்துவ கவுன்சில் ஆராய்ச்சி மையத்தின் இளையோர் நீரிழிவு பதிவுகளின்படி, இந்தியாவில் 25 வயதுக்கு உட்பட்ட நான்கு பேரில் ஒருவர் டைப்-2 நீரிழிவு வகையின் லேசான அறிகுறிகளை கொண்டிருக்கின்றனர்.

Advertisment

ஆரோக்கியமான ரத்த சர்க்கரை அளவை பராமரிப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. எனவே, ரத்த சர்க்கரை அளவுகளின் வரம்புகளைப் புரிந்து கொள்வது நீரிழிவு நோயின் சுய நிர்வாகத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.

வயது, பாலினம் எதுவாக இருந்தாலும், காலையில் எவருக்கும் ஆரோக்கியமான ரத்த சர்க்கரை அளவு 100 mg/dl க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

இருப்பினும், ஒவ்வொரு நபரின் ஆரோக்கியம் மற்றும் உடல் செயல்பாடு தனிப்பட்டதாக இருப்பதால், அவர்களின் ரத்த சர்க்கரை அளவு அவர்களின் உணவு, மருந்து மற்றும் பிற காரணிகளுக்கு ஏற்ப மாறுபடும்.

ரத்தச் சர்க்கரைக் குறைவு அல்லது உயர் ரத்தச் சர்க்கரை, ப்ரீடியாபெடிக் மற்றும் நீரிழிவு நிலைகளுடன் தொடர்புடையது.

சாதாரண சர்க்கரை அளவு 90 முதல் 100 mg/dL வரை இருக்கும். இருப்பினும், பகல் மற்றும் இரவு நேரங்களில் இது அடிக்கடி மாறுகிறது. ஆனால் சில நேரங்களில், அதிக அல்லது குறைந்த ரத்த சர்க்கரை அளவுகள், மருத்துவ கவனிப்பு தேவைப்படும் சுகாதார நிலைமைகளின் அறிகுறிகளாகும்.

20 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் ரத்த சர்க்கரை வரம்பு இங்கே.

உணவுக்கு முன்: 70-130 mg/dL

உணவுக்கு 1-2 மணி நேரம் கழித்து: 180 mg/dL க்கு கீழ்

சாப்பிடாமல் இருக்கும் போது: 100 mg/dL க்கு கீழ்

தூங்கும் போது: 100-140 mg/dL

சர்க்கரை நோய் இல்லாத 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான சாதாரண ரத்த சர்க்கரை அளவு

கடைசி உணவுக்குப 2 மணி நேரம் பிறகு: 90 முதல் 140 mg/dL

கடைசி உணவுக்கு 2 முதல் 4 மணி நேரம் பிறகு: 90 முதல் 130 mg/dL

கடைசி உணவுக்கு 4 முதல் 8 மணி நேரம் பிறகு: 80 முதல் 120 mg/dL

ரத்தத்தில் சர்க்கரை அளவு 180 mg/dL க்கு அதிகமாக இருப்பது ஆபத்தானது. 300 mg/dL க்கும் அதிகமாக இருந்தால், உங்கள் ரத்த சர்க்கரை அளவை பாதுகாப்பான வரம்பிற்குள் பெற உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்.

Diabetes

அறிகுறிகள் என்ன?

அதிக தாகம், இரவு நேரத்தில் சிறுநீர் கழிக்க அடிக்கடி தூக்கத்தில் இருந்து விழித்தல், அதீத மயக்கம், எந்த வித முயற்சியும் இன்றி எடை குறைதல், காலில் தொற்று ஏற்படுதல், மங்கலான பார்வை, மற்றும் காயங்கள் குணமடையாதது ஆகியவை நீரிழிவு நோயின் அறிகுறிகள் என பிரிட்டிஷ் தேசிய சுகாதர சேவை அமைப்பு கூறுகிறது.

எனினும், இது போன்ற எந்த அறிகுறியும் இன்றியும் கூட நீரிழிவு நோய் நேரிட வாய்ப்புள்ளது.

குறைந்த ரத்தச் சர்க்கரை என்பது நீரிழிவு நோயின் மோசமான சிக்கல், அதிக நீரிழிவு நோய் எதிர்ப்பு மருந்துகள் உட்கொள்வதாலேயோ அல்லது உரிய நேரத்தில் சாப்பிடாததாலேயோ இந்தப் பிரச்சினை ஏற்படும்.

பொதுவாக, இரவில் தாமதமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இந்த நேரத்தில் உணவுக்கான நமது கிளைசெமிக் எதிர்வினை அதிகமாகவும் குறைவாகவும், சீரற்ற முறையில் இருக்கும்.

நீரிழிவு நோய் பாதிப்புக்கு உள்ளான ஒருவர், மருந்துகளுடன் தகுந்த உணவு முறைகள், வாழ்க்கை முறையில் மாற்றம் ஆகியவற்றை மேற்கொள்ளாவிட்டால் நீரிழிவை கட்டுப்படுத்துவது சிக்கலானது.

மேலும் இந்தியாவின் நீரிழிவு நோய் வழிகாட்டு முறைகளில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் நீரிழிவு நோய் இருக்கிறதா என்று அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment