நல்ல உணவுகள், வீட்டிலேயே எளிய பயிற்சிகள்: பறந்தே போகும் ‘சுகர்’

Type 2 diabetes blood sugar: இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை நம்பகமான இயந்திரங்களான home glucose monitoring மூலம் வீட்டிலேயே சோதித்துப் பார்க்கலாம்.

diabetes, diabetes treatment, நீரிழிவு நோயாளிகள், நீரிழிவு சர்க்கரை நோயாளிகள், சுகர் பேஷண்ட்ஸ், diabetes healthy lifestyle choices, diabetes test coronavirus, coivd 19, diabetes exercise,
diabetes, diabetes treatment, நீரிழிவு நோயாளிகள், நீரிழிவு சர்க்கரை நோயாளிகள், சுகர் பேஷண்ட்ஸ், diabetes healthy lifestyle choices, diabetes test coronavirus, coivd 19, diabetes exercise,

Diabetes Tips: ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்து விட்டால் அவர்களது இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவு மட்டும் பாதிக்கப்படுவதில்லை, அவர்களது இன்சுலின் உற்பத்தி அளவும் சமரசம் செய்யப்படுகிறது. அதிக அல்லது நிர்வகிக்கப்படாத இரத்த சர்க்கரை அளவைக் கொண்டவர்களுக்கு சாதாரண இரத்த ஓட்டத்தை விட குறைவாகவே இருக்கும், இதன் காரணமாக உடல் ஊட்டச்சத்துக்களை கட்டுப்படுத்தவும் குணப்படுத்துவதற்கும் கடினப்படுகிறது. இதனால், நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைவதால், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொற்றுநோய்களுக்கு ஆளாகிறார்கள், மேலும் அவர்கள் இயல்பு நிலையை அடைய அதிக காலம் தேவைப்படுகிறது. கொரோனா வைரஸ் காலகட்டத்திலும் கூட இந்த நிலை சமாளிக்கதக்கதே.


கோவிட் -19 பாதித்தவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பதால் நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது காலத்தின் தேவை.

* தேவையான நீரைப் பருகுங்கள், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பச்சையான காய்கறி மற்றும் பழங்களை உண்ணுங்கள்.

தூக்கம் எவ்வளவு முக்கியம் தெரியுமா? கூந்தல் பராமரிப்பு எளிய வழிகள்

* ”தினசரி உட்ற்பயிற்சி செய்யுங்கள், வீட்டில் நடவடிக்கைகளை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு அழுத்தம் தராத உடற்பயிற்சிகளை செய்யுங்கள், யோகா, பிராணாயாமம், அழ்ந்த மூச்சு பயிற்சி செய்யுங்கள். இது உங்கள் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தும் மற்றும் சுவாசத்தில் எந்த இடையூறும் ஏற்படுத்தாது. சிறு சிறு வீட்டு வேலைகளான வீடு பெருக்குவது, வீட்டை துடைப்பது மற்றும் சுத்தம் செய்வது ஆகியவற்றை செய்யலாம்”, என மும்பை ACI Cumballa Hill மருத்துவமனை நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர் Anil Boraskar பரிந்துரைக்கிறார்.

* இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை நம்பகமான இயந்திரங்களான home glucose monitoring மூலம் வீட்டிலேயே சோதித்துப் பார்க்கலாம்.

* உங்களுக்கு நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை இருந்தால், உங்கள் இரத்த அழுத்த அளவை அவ்வப்போது கண்காணித்து மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

பளபளன்னு மிருதுவான ஸ்கின் வேணுமா? சிம்பிள் டிப்ஸ்

* கைகளை கழுவுவது போல கால்களை கழுவுவதும் மிக முக்கியமானது. அவற்றை தவறாமல் சுத்தம் செய்யுங்கள்.

* நல்ல தனிமனித சுகாதாரத்தை பேணுங்கள். உங்கள் தோல், வாய் மற்றும் பிற உறுப்புகளின் சுத்தத்தையும் பராமரியுங்கள். சமூக இடைவெளியைப் பின்பற்றுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Diabetes tips type 2 diabetes blood sugar diabetes tamil news

Next Story
வாட்டி வதைக்கும் வெயில்… வியர்வை துர்நாற்றத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? பயனுள்ள டிப்ஸ்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com