Advertisment

பிற்பகல் 2 மணி டூ மாலை 6 மணி... சுகரை குறைக்க இதுதான் சரியான நேரமா?

நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும், இன்சுலின் எதிர்ப்பு அபாயத்தைக் குறைக்கவும், சிறந்த நேரம் உள்ளதா என்பதைப் புரிந்துகொள்ள நிபுணர்களை அணுகினோம்.

author-image
WebDesk
Nov 07, 2022 15:04 IST
lifestyle

Is there an ideal time for diabetics to work out for better blood sugar control?

நீரிழிவு நோயாளிகள், குறிப்பிட்ட நேரத்தில் உடற்பயிற்சி செய்வது அதிக பலன்களைத் தரும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

Advertisment

நெதர்லாந்தில் உள்ள லைடன் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் டாக்டர் ஜெரோன் வான் டெர் வெல்டே தலைமையிலான ஒரு புதிய ஆய்வு, Diabetologiaவில் வெளியிடப்பட்டது, நாளின் பிற்பகுதியில் உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கலாம் மற்றும் இன்சுலின் எதிர்ப்பை கால் பங்காக குறைக்கலாம் என்று அது பரிந்துரைத்தது.

ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக - நெதர்லாந்து எபிடெமியாலஜி ஆஃப் ஒபிசிட்டி (NEO) ஆய்வின் தரவைப் பயன்படுத்தியது - பங்கேற்பாளர்கள் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், இதன் போது உணவுக்கு முன் மற்றும் உணவுக்குப் பிறகு இரத்த குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவை அளவிட இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன.

இந்த ஆய்வைக் கருத்தில் கொண்டு, நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும், இன்சுலின் எதிர்ப்பு அபாயத்தைக் குறைக்கவும், சிறந்த நேரம் உள்ளதா என்பதைப் புரிந்துகொள்ள நிபுணர்களை அணுகினோம்.

publive-image

தசைகளை வலுப்படுத்தும் ஏரோபிக் பயிற்சிகளை முயற்சி செய்யலாம்.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, வாரத்தில் 150 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் ஏரோபிக்-உடற்பயிற்சி செய்வது உடலின் செல்களின் இன்சுலின் உணர்திறன் மற்றும் இரத்த குளுக்கோஸ் ஹோமியோஸ்டாசிஸை மேம்படுத்துகிறது.

நாளின் எந்த நேரத்திலும் எந்த வகையான உடல் செயல்பாடும் நன்மை பயக்கும் என்று உணவியல் நிபுணர் கரிமா கோயல் கூறினார். சுறுசுறுப்பாக இருப்பது உடலின் குளுக்கோஸ் ஹோமியோஸ்டாசிஸை மேம்படுத்துகிறது மற்றும் இன்சுலினுக்கு, உடலின் செல்களின் பதிலை மேம்படுத்துகிறது.

நீரிழிவு நோயாளிகளின் சிறந்த ஆரோக்கியத்துக்கும், நாளின் பிற்பகுதியில் உடல் செயல்பாடுகளுக்கும் இடையே ஒரு தொடர்பை ஆராய்ச்சிகள் கண்டறிந்தாலும், ஒவ்வொரு வயதினரும், அனைத்து உடல் வகைகளும் அல்லது இணை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளும் பயனடைவார்களா என்பது இன்னும் முடிவாகவில்லை.

இதுகுறித்து மருத்துவர் ஜிதேந்திர குமார் கூறுகையில், அதிகாலையை விட மதியம் 2-6 மணிக்குள் உடற்பயிற்சி செய்வது மிகவும் சிறந்தது என்றார்.

இதற்கு முக்கிய காரணம், காலை நேரத்தை விட மாலை நேரங்களில் நமது உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும். எனவே, மாலை நேரங்களில் தேவைப்படும் வார்ம்-அப் நேரம் குறைவாக இருக்கும் என்று கூறினார்.

நீரிழிவு நோயாளிகளுக்கும் இது பொருந்துமா?

நீரிழிவு நோயாளிகள் மாலையில் உடற்பயிற்சி செய்யும் போது சிறந்த இன்சுலின் எதிர்ப்பு மற்றும் சிறந்த சர்க்கரை கட்டுப்பாட்டுடன் உள்ளனர். மாலையில் உடற்பயிற்சியின் போது உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் தசையை உருவாக்க உதவுகிறது, அதே நேரத்தில் எண்டோர்பின்கள் தூக்கத்தைத் தூண்டுகின்றன, மேலும் மன அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றன, என்று மருத்துவர் குமார் கூறினார்.

காலையில் உடற்பயிற்சி செய்யும் போது, ​​பலர் நீண்ட நேரம் உண்ணாமல் இருப்பார்கள், இது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதல்ல. ஏனெனில் இது சர்க்கரையின் அளவைக் குறைக்கும். ஆனால் மாலை நேர உடற்பயிற்சியானது பகலில் உண்ணப்படும் கலோரிகள் எரிக்கப்படுவதையும், சர்க்கரை சிறப்பாக கட்டுப்படுத்தப்படுவதையும் உறுதி செய்கிறது என்று குமார் குறிப்பிட்டார்.

நீரிழிவு நோயாளிகள் என்ன வகையான பயிற்சிகளை செய்ய வேண்டும்?

வாரத்துக்கு 3 நாட்கள், 2-3 அமர்வுகள் strength training செய்யவும். ஒவ்வொரு பயிற்சி அமர்வும் முக்கிய தசை குழுக்களின் 5-10 பயிற்சிகளை உள்ளடக்கியிருக்க வேண்டும், மேலும் 10-15 முறை மீண்டும் செய்ய வேண்டும் என்று ஒரு உடற்பயிற்சி நிபுணர் கோயல் கூறினார்.

எனவே ஸ்ட்ரெண்த் டிரெயினிங் மற்றும் டம்ப்பெல்ஸ், புஷ்-அப்ஸ், சிட்-அப்ஸ் மற்றும் ரெசிஸ்டன்ஸ் பயிற்சிகள், நீரிழிவு நோயாளிகளின் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கிளைசெமிக் மற்றும் ஆரோக்கிய விளைவுகளுக்கு, ஒரு நீரிழிவு நோயாளி ஏரோபிக் மற்றும் ரெசிஸ்டன்ஸ் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

இதை ஒப்புக்கொண்ட மருத்துவர் ரவி சேகர் ஜா, "உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது உணவு சாப்பிட்ட 1 முதல் 3 மணிநேரம்" உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம் என்று கூறினார். உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் குறைவாக இருந்தால், உடற்பயிற்சி செய்வதற்கு முன் சில பழங்களை உட்கொள்ளலாம். உங்கள் இரத்த சர்க்கரை அளவு மிக அதிகமாக இருந்தால் (300 mg/dl அல்லது அதற்கு மேற்பட்ட வரம்பில்), நீங்கள் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது ஆரம்பத்தில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்.

புகை அல்லது மாசு இருக்கும் போது, ​​நாம் வெளிப்புற உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அது நம் இதயம் மற்றும் நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும்.

நீரிழிவு நோயாளிகள் உடற்பயிற்சி செய்வதற்காக கோயல் பகிர்ந்த டிப்ஸ்

உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பதோடு, செல்களை நீரேற்றமாக வைத்திருக்க நிறைய திரவங்களை குடிக்கவும்.

உடற்பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்பும், உடற்பயிற்சியை முடித்த பின்பும் உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவைக் கண்காணிக்கவும். இது 230 mg/dL ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது அல்லது 100 mg/dL க்கும் குறைவாக இருக்கக்கூடாது என்று கோயல் குறிப்பிட்டார்.

சிறிய உடற்பயிற்சிகளுடன் வொர்க்அவுட்டைத் தொடங்கி படிப்படியாக வேகத்தை அதிகரிக்கவும்.

எந்தவொரு இரத்தச் சர்க்கரைக் குறைவிற்கும், கார்போஹைட்ரேட் சிற்றுண்டியை கைவசம் வைத்திருங்கள். நீங்கள் சோர்வாகவோ அல்லது மயக்கமாகவோ உணர்ந்தால் அதை உட்கொள்ளவும்.

உடற்பயிற்சி செய்யும் போது வசதியான காட்டன் சாக்ஸ் மற்றும் காலணிகளை அணியவும் மற்றும் பாதங்களில் ஏதேனும் புண்கள், கொப்புளங்கள் அல்லது வெட்டுக்கள் இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் தெரிவிக்கவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment