நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் நெல்லி தொக்கு செய்வது எப்படி?

Amla Thokku Benefits for Diabetes Patients : மேலும் நெல்லிக்காயை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக தொக்கு செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

How to Use Amla Thokku for Diabetes Patients : நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம்.  நெல்லிக்காய் சாறுடன் தேன் எலுமிச்சம்பழச் சாறு சம அளவு கலந்து காலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் முற்றிலும் குணமாகும்.

நெல்லிக்காயை தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வர முடி உதிர்வதை தடுக்கும் மற்றும் இளநரையை மாற்றும். முடி நன்கு வளரும். இவ்வாறு நெல்லிக்காயில் பலவிதமான மருத்து குணங்கள் இருக்கின்றன. மேலும் நெல்லிக்காயை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக தொக்கு செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

நெல்லிக்காய் தொக்கு செய்ய தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் – 20
எண்ணெய் – 4 tsp
கடுகு – 1 tsp
வெந்தையம் – 1/4 tsp
பெருங்காயத் தூள்- 1/2 tsp
மிளகாய்த் தூள் – 5 tsp
உப்பு – 3 tsp
வெல்லம் – 1 tsp

செய்முறை:

நெல்லிக்காய்களைக் கடாயில் தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்கள் வேகும் வரை கொதிக்க விடவும். வெந்ததும் அவற்றைத் தண்ணீரிலிருந்து வடிகட்டி காயவிடவும். சூடு தணிந்ததும் கொட்டைகளை நீக்கி சதைப் பகுதியை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.  அதை ஜாரில் கொட்டி மிக்ஸியில் மைய அரைத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு பொரிந்ததும் வெந்தையம் சேர்க்கவும்.
பின் மிளகாய்த் தூள் சேர்த்துக் கிளரவும். பின் அரைத்து வைத்துள்ள நெல்லிக்காய் பேஸ்டை கொட்டி நன்கு கிளறவும்.  தற்போது உப்பு மற்றும் வெல்லம் சேர்க்கவும். தொக்கு நன்கு கருஞ்சிவப்பு நிறத்தில் எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.

மேலும் படிக்க : நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் செர்ரிகள்…

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close