Diabetic Recipes: சர்க்கரையை மூச்சிரைக்க ஓட வைக்கும் உணவுகள்!

Diabetic Recipes For Breakfast and Dinner: சர்க்கரை நோய் என்பது நீங்கள் வாழ்க்கையே வெறுக்கும் அளவுக்கு பயங்கரமானது அல்ல. திட்டமிடலுடன், மனக்கட்டுப்பாடும் இருந்தால் சர்க்கரையை மூச்சிரைக்க ஒடவைக்கலாம்

Diabetic Recipes For Breakfast and Dinner: சர்க்கரை நோய் என்பது நீங்கள் வாழ்க்கையே வெறுக்கும் அளவுக்கு பயங்கரமானது அல்ல. திட்டமிடலுடன், மனக்கட்டுப்பாடும் இருந்தால் சர்க்கரையை மூச்சிரைக்க ஒடவைக்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Diabetic Recipes, Indian Diabetic Recipes

Diabetic Recipes, Indian Diabetic Recipes

Best Diabetic Friendly Recipes in Tamil: சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள், சாப்பிடக்கூடாத உணவுகள் குறித்தும், எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் குறித்தும் இங்கே பார்க்கலாம்.

சாப்பிடக்கூடாத உணவுகள் :

Advertisment

உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பரங்கிக்காய், வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், அன்னாசிப்பழம், சீத்தாப்பழம், சப்போட்டா பழம், தர்பூசணி, பேரிட்சை, எருமைபால், பாலாடை, தயிர், வெண்ணெய், நெய், பால்கோவா, ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி, ஈரல், மூளை, முட்டையின் மஞ்சள் கரு, தேங்காய் எண்ணெய், வனஸ்பதி, பாமாயில், குளிர்பானங்கள், சர்க்கரை, வெல்லம், இனிப்பு பலகாரங்கள், சிப்ஸ், வடை, முறுக்கு, பூரி, சமோசா போன்ற எண்ணெயில் பொரித்த பலகாரங்கள், பிரட், பன், கேக், பப்ஸ், ஐஸ்கிரீம், நெய்பிஸ்கட், மிளகாய் சாஸ், தக்காளி சாஸ், ஊறுகாய், தேங்காய், வேர்கடலை.

சாப்பிடக்கூடியவை :

மேற்கண்ட காய்கறிகளை தவிர மற்ற எல்லாக்காய்களையும், கீரைகளையும் சாப்பிடலாம். பீட்ரூட், கேரட் அளவோடு சாப்பிடலாம். ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, பேரிக்காய், மாதுளை, சாத்துக்குடி, பப்பாளி, திராட்சை, மோர், பசும்பால், கொழுப்பு நீக்கப்பட்ட பால், கோழிக்கறி, மீன்(வறுக்கக்கூடாது), முட்டையின் வெள்ளைக்கரு, சூரியகாந்தி எண்ணெய், தவிட்டு எண்ணெய், நல்ல எண்ணெய், ஆலிவ் எண்ணெய் (ஒரு நபருக்கு மாதம் ½ லிட்டர் என்ற அளவில்), டீ, காபி (அளவோடு), வெள்ளரி, முளைகட்டி பாசிப்பயிறு, சுண்டல், முந்திரி, பாதாம், வால்நட்.

Diabetic Friendly Recipes

காலையில் முருங்கைக்கீரை வெங்காயம் சேர்த்த சூப் அல்லது கொத்தமல்லி, வெந்தயம் சேர்த்த குடிநீரை அருந்தலாம். வெட்டி வேர் போட்ட பானை நீரும், சீரகத் தண்ணீரும் தினசரி உபயோகத்துக்கு நல்லது. கம்பு அடை, சிவப்பரிசி அவல் உப்புமா, கைக்குத்தல் அரிசிப் பொங்கல் என அளவாகச் சாப்பிடலாம். காலை உணவாக நம்ம ஊர் நவதானியத்தில் அல்லது சிறுதானியங்களில் செய்த உப்புமா, அடை சிறந்தவை. கஞ்சியாக செய்து குடிக்க வேண்டாம். கஞ்சி என்றால் சர்க்கரை ரத்தத்தில் கலக்கும் வேகம் அதிகமாகிவிடும். அதை மட்டும் தவிர்க்கவும்.

Advertisment
Advertisements

மதிய உணவுக்கு... வாரத்துக்கு இரண்டு நாள் அரிசி சோறு, இரண்டு நாள் தினை அரிசி சோறு, இரண்டு நாள் வரகரிசி சோறு, ஒரு நாள் மாப்பிள்ளை சம்பா அவலில் செய்த உணவு நல்லது.

இரவு உணவு... தினை ரவா உப்புமா, கேழ்வரகு அடை ஆகியவற்றை பாசிப் பயறு கூட்டுடன் சாப்பிடலாம்.

ஒன்று மட்டும் உண்மை, சர்க்கரை நோய் என்பது நீங்கள் வாழ்க்கையே வெறுக்கும் அளவுக்கு பயங்கரமானது அல்ல. திட்டமிடலுடன், மனக்கட்டுப்பாடும் இருந்தால் சர்க்கரையை மூச்சிரைக்க ஒடவைக்கலாம்.

Healthy Life

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: