Advertisment

சுகர் பாதித்த பெண்களுக்கு செக்ஸில் திருப்தி இன்மை: ஆய்வு கூறுவது என்ன?

நீரிழிவு பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு விரைப்புத் தன்மை பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை. அவர்களால் முழுமையாக செக்ஸில் ஈடுபட முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

author-image
WebDesk
Jul 25, 2022 22:19 IST
diabetes 10 - unspalsh (1)

நீரிழிவு பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு விரைப்புத் தன்மை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

நீரிழிவு என்பது உடலில் போதுமான அளவு இன்சுலின் சுரக்காததால் ஏற்படுகிறது. பொதுவாக இந்த நோய் சிறியவர்கள், நடுத்தரம் மற்றும் முதியவர்கள் என வித்தியாசம் பார்ப்பதில்லை.

எனினும் பெண்களை காட்டிலும் ஆண்களே பெருமளவு நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர் எனக் ஆய்வுகள் கூறுகின்றன. இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால், நீரிழிவு பாதிக்கப்பட்ட பெண்கள் உடலுறவில் முழு திருப்தியை எட்ட முடியாதாம்.

Advertisment

அதாவது அவர்கள் உடலுறவு கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர்களால் இயல்பாக ஒரு தம்பதி அனுபவிக்கும் இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முடியாதாம்.

மேலும் நீரிழிவு பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு விரைப்புத் தன்மை பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை. அவர்களால் முழுமையாக செக்ஸில் ஈடுபட முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து அமெரிக்காவின் பெண்கள் சுகாதார ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் இந்த முடிவுகள் தெரியவந்துள்ளன. இந்த ஆய்வு முடிவுகள் அமெரிக்க நாளேடுகளில் வெளியாகியுள்ளன.

இந்த ஆய்வு 40 முதல் 80 வயது வரையிலான 2,270 பேரிடம் நடத்தப்பட்டன. இந்தப் பங்கேற்பாளர்களில் 21.4 சதவீதம் பேருக்கு அதிகப்படியான நீரிழிவு பாதிப்புகள் இருந்தன. 6.1 சதவீதம் பேர் இன்சுலின் எடுத்துக்கொள்பவர்கள் ஆவார்கள்.

இவர்களில் 63.7 சதவீதம் பேர் தாங்கள் பாலியல் ரீதியான பிரச்சினைகளை சந்திப்பதாக தெரிவித்தனர். மற்ற பெண்களுடன் ஒப்பிடுகையில் இவர்களுக்கு பாலியல் ரீதியாக எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆனால் பாலுறவில் இவர்களுக்கு திருப்தி பெறுவதில் சிக்கல் உள்ளது. அதேபோல் நீரிழிவு சிகிச்சை பெறும் பெண்கள் உச்சக்கட்டம் அடைவதிலும் சிக்கல் உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Diabetes #Womens Health
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment