Princess Diana Wedding Dress Mistakes Tamil : உலகெங்கிலும், பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சுற்றி ஏராளமான எதிர்பார்ப்புகள் உள்ளன. கேம்பிரிட்ஜ் டச்சஸ் - கேட் மிடில்டன் மற்றும் சசெக்ஸின் டச்சஸ் மேகன் மார்கில் ஆகியோர் எப்போதும் செய்திகளின் முதல் பக்கத்தை ஆக்கிரமிப்பவர்கள். ஆனால், இவர்களைவிட இந்த இருவரின் மாமியார், மறைந்த வேல்ஸ் இளவரசி, டயானா தினம் தினம் மக்களை ஈர்த்து வந்தவர்.
மிடில்டன் மற்றும் மார்கிலின் அந்தந்த திருமண ஆடைகள் நிறைய சலசலப்பை ஏற்படுத்தியிருந்தாலும், ராயல் திருமண ஆடை தயாரிப்பாளர் சோலி சாவேஜ், அவர்களின் இரு கவுன்களிலும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், திருமண ஆடைக்கான பரபரப்பான செய்தியை முதலில் உருவாக்கியவர் இளவரசி டயானாதான்.
என்றாலும் இந்த ஐகானிக் சின்னம் வடிவமைக்கப்பட்ட குழுவில் சில முக்கிய சிக்கல்கள் இருந்தன என சாவேஜ் சமீபத்தில் இன்சைடரிடம் கூறியுள்ளார். “அது ஒரு அழகான உடை. ஆனால், அது கேரிஜ்ஜில் அடைக்கப் போகிறது என்று யாராவது எச்சரிக்கை செய்திருக்க வேண்டும்! அதனை சுருக்கங்கள் இல்லாமல் நன்கு இஸ்திரி செய்திருக்க வேண்டியது அவசியம் என்று தோன்றியது” என சாவேஜ் மேற்கோளிட்டுள்ளார்.
டயானாவின் திருமண கவுனை, கணவர்-மனைவியான டேவிட் இமானுவேல் மற்றும் எலிசபெத் ஆகியோர் வடிவமைத்திருந்தனர். அதில் 25 அடி நீளமுள்ள ட்ரெயின் வடிவமைக்கப்பட்டது. 1981-ம் ஆண்டு லண்டனில் உள்ள செயின்ட் பால்ஸ் கதீட்ரலுக்கு இளவரசி சென்றபோது ஒரு வண்டியில் அந்த ஆடை அடைக்க வேண்டியிருந்தது.
"இளவரசி டயானா தேவாலயத்திற்குள் நடந்து செல்வதற்கு முன்பு உடையை சரிசெய்திருக்கலாம். இதற்கு 10 நிமிடங்கள் எடுத்திருக்கும். அந்த மடிப்புகள் அனைத்தும் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்திருக்கும்" என்று சாவேஜ் சுட்டிக்காட்டினார்.
2018-ம் ஆண்டில் ஐடிவியில் ‘ஒரு ராயல் திருமணத்திற்கான அழைப்பு’ நிகழ்ச்சி தோன்றியபோது, டயானா திருமண வாகனத்திலிருந்து இறங்கியபோது ‘திகிலடைந்தேன்’ என்று எலிசபெத் இமானுவேல் கூறியிருந்தார். "கொஞ்சம் கொஞ்சம் சுருக்கங்கள் தோன்றும் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால், உடையில் அத்தனை சுருக்கங்களோடு அவர் செயின்ட் பால்ஸுக்கு வருவதைக் கண்டதும் நான் மயக்கமடைவதைப் போன்று உணர்ந்தேன்".
ஆனால், கவுன் மீது சுருக்கங்கள் மட்டும் பிரச்சினை இல்லை. அறிக்கையின்படி, வேல்ஸ் இளவரசி தனது உடையில் சிறிது வாசனை திரவியத்தை ஏற்கெனவே கொட்டியிருக்கிறார். அதனை டயானாவின் ஒப்பனை கலைஞர் பார்பரா டேலி சுத்தம் செய்ய முயன்றபோது, வாசனை திரவியம் இன்னும் பெரிய கறையை ஏற்படுத்திவிட்டது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"