பிரசவத்துக்கு பின் தொங்கும் வயிறு... இத மட்டும் அவசியம் பண்ணாதீங்க: டாக்டர் ஐசக் அப்பாஸ்
பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு வயிறு தொங்கி போவதற்கான காரணத்தை மருத்துவர் ஐசக் அப்பாஸ் தெரிவித்துள்ளார். இதனை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய சில வழிமுறைகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு வயிறு தொங்கி போவதற்கான காரணத்தை மருத்துவர் ஐசக் அப்பாஸ் தெரிவித்துள்ளார். இதனை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய சில வழிமுறைகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களின் உடல் நிலை என்பது ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்றார் போல் மாற்றம் அடையும். அதிலும் பிரசவத்திற்கு பின்பாக உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஏராளமாக உள்ளன.
Advertisment
பெரும்பாலான பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னர் வயிறு தொங்கி விடும். இதனை diastasis recti என்று கூறுவார்கள் என மருத்துவர் ஐசர் அப்பாஸ் தெரிவித்துள்ளார். இந்த நிலை ஒரு குழந்தையை பெற்ற பின்னர், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் மற்றொரு குழந்தையை பெற்றுக் கொள்பவர்களுக்கு ஏற்படும்.
இதேபோல், இரட்டைக் குழந்தையை பெற்றெடுத்த தாய்மார்களுக்கும் இந்த நிலை உருவாகும் என்று மருத்துவர் ஐசர் அப்பாஸ் தெரிவித்துள்ளார். ரெக்டஸ் அப்டாமினஸ் என்ற வயிற்றின் இரு தசைகளை ஒன்றாக இணைக்கும் ஒரு திசு தான் லினியா அல்பா. கொலஜன் ஃபைபர்களால் இவை வலுவாக கட்டமைத்திருந்தாலும் பிரசவத்தின் போது ஏற்படும் அழுத்தத்தால் இவை விரிவடைகிறது.
இந்த நிலையை சரி செய்வதாகக் கூறி பிரசவத்திற்கு பிறகு ஓரிரு வாரங்களில் உடற்பயிற்சியில் ஈடுபடக் கூடாது என்று மருத்துவர் ஐசக் அப்பாஸ் தெரிவித்துள்ளார். புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்கள், பிரசவத்திற்கு சில மாதங்களுக்கு பின்னர் தான் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
Advertisment
Advertisements
ஏனெனில், பிரசவத்திற்கு பின்னர் உடல் இயல்பு நிலைக்கு திரும்புவது அவசியம். மேலும், லையிங் க்ரன்ச்சஸ், கேபிள் க்ரன்ச்சஸ் மற்றும் ஸ்குவாட்ஸ் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளக் கூடாது. இவை லினியா அல்பா திசுவில் மேலும் அழுத்தம் கொடுத்து தளர்த்தி விடும்.
இதற்கு பதிலாக ஹீல் ஸ்லைட்ஸ், அப்டோமினல் ஹாலோவிங், பெல்விக் ஃப்ளோர் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு, புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் ஐசக் அப்பாஸ் அறிவுறுத்துகிறார்.
நன்றி - Rebirth Fitness School -தமிழ் Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.