இந்தியாவில் கோவில்கள்
இந்தியாவில், ஆண்கள் செல்ல அனுமதி இல்லாத, கட்டுப்பாடுகள் கொண்ட முக்கிய புராதன கோவில்கள் குறித்து பார்க்கலாம். இந்திய கலாசாரத்தில் கோவில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்திய மன்னர்கள் கோவில்கள் கட்டுவதில் முக்கிய பங்காற்றியுள்ளனர்.
கஜூராகோ பிரம்மன் கோவில்
மத்தியப் பிரதேச மாநிலம் கஜூரகோவில் அமைந்துள்ள பிரம்மன் கோவில் திருமணமான பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
மண்டைக்காடு அம்மன் கோவில்
தமிழ்நாட்டின் தென் எல்லையான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் குறிப்பிடட இடங்களில் திருமணமான ஆண்கள் செல்ல அனுமதி இல்லை. தல விருட்சம் வேப்ப மரம் ஆகும். ஆண்கள் சபரிமலைக்கு விரதம் இருப்பது போல் பெண்கள் மண்டைக்காடு பகவதி அம்மனுக்காக விரதம் மேற்கொள்வார்கள்.
புஷ்கர் பிரம்மா கோவில்
ராஜஸ்தான் மாநிலம் புஷகரில் அமைந்துள்ள இந்த பிரம்மா கோவில் பிரசித்தி பெற்றதாகும். இங்கு கார்த்திகை பூர்ணிமா தினம் சிறப்புமிக்கதாகும். இங்கு ஆண்களுக்கு அனுமதி இல்லை. இக்கோவில் சரஸ்வதி தேவியால் சபிக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது.
சக்குளத்துகாவு கோவில் தேவி கோவில்
கேரள மாநிலம் ஆலப்புழை சக்குளத்துகாவு கோவில் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என நம்பப்படுகிறது. துர்கா தேவி கோயிலின் முதன்மை தெய்வமாக உள்ளார். இக்கோவிலில் ஆண்களுக்கு சில இடங்களில் அனுமதி கிடையாது.
சந்தோஷி மாதா கோவில்
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணடிசியில் இந்த சந்தோஷி மாதா திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு பெண்கள் மட்டும்தான் அனுமதிக்கப்படுவார்கள்.
காமகியா கோவில்
அஸ்ஸாம மாநிலத்தில் அமைந்துள்ள காமகியா கோவிலில் குறிப்பிட்ட சில தினங்களில் ஆண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இது சிறப்பு வாய்ந்த சக்தி பீட கோவிலாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.