Did you know these facts about Dandruff Tamil News : உச்சந்தலையில் ஏற்படும் மிகவும் பொதுவான பிரச்சனை பொடுகு. இது பெரும்பான்மையான மக்களுக்கு மிகப் பெரிய தொல்லையாகவே உள்ளது. இது, வறண்ட சருமத்தின் சிறு துண்டுகள் உச்சந்தலையில் உதிர்ந்து விடும் ஒரு நிலை. இது தொற்று அல்ல என்றாலும், பொடுகு எளிதில் போகாது என்பதால் அதற்காக சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம்.
பொடுகு பெரும்பாலும் உச்சந்தலையில் அரிப்பு மற்றும் சருமம், முடி, புருவம் மற்றும் தோள்களில் அதன் உதிரி செதில்களை ஏற்படுத்துகிறது. வயது, வானிலை, மன அழுத்த நிலைகள், மருத்துவ நிலைகள், முடிக்குப் பயன்படுத்தும் பொருட்கள், ஒவ்வாமை எதிர்வினைகள் போன்ற பல்வேறு காரணிகள் பொடுகு வளரும் அபாயத்தை அதிகரிக்கும். பொடுகுக்கான பல்வேறு தகவல்கள் மற்றும் தீர்வுகளால் இணையம் நிரம்பி வழிகிறது. இதனால் சரியான உண்மைகளை அறிந்து கொள்வது கடினமாகிறது.
இதனால் சமீபத்தில் சரும நல மருத்துவர் டாக்டர் மாதுரி அகர்வால் பொடுகு பற்றித் தெரியாத சில உண்மைகளை விளக்கும் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார்.
“பொடுகை அகற்றுவது ஒரு முறை வேலை அல்ல. உங்கள் தலை முடி ஆரோக்கியமாக இருக்க நீங்கள் சரியான விஷயங்களைச் செய்ய வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
பொடுகு என்பது உங்கள் சரும செல்கள் உதிர்தல்தான்
“நம் சருமம் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும். ஆம், நிமிடத்திற்கு 30,000-க்கும் அதிகமாக இறந்த செல்களை வெளியேற்றி, புதிதாக உற்பத்தி செய்துப் புதுப்பித்துக்கொள்கிறோம். இந்த செயல்முறையின்போது, சருமத்திலிருந்து வெளியேறும் செல்களின் விகிதம் அதிகரிக்கும்போது, அது செதில்களாக மாறுகிறது” என்று டாக்டர் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.
பொடுகு இருந்தால் ஸ்டைலிங் தயாரிப்புகளைப் பயன்படுத்தலாமா?
“நீங்கள் பொடுகு தொல்லையை எதிர்த்துப் போராடுகிறீர்கள் என்றால், உங்கள் முடி அல்லது உச்சந்தலையில் எந்த ஸ்டைலிங் தயாரிப்புகளையும் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அப்படியெல்லாம் அதிகம் கற்பனை செய்ய அவசியமில்லை. உங்கள் தலைமுடியைப் பராமரிப்பதற்காக, நீங்கள் அவ்வப்போது உங்கள் தலைமுடியை அலசுகிறீர்கள் என்றால், தாராளமாக ஸ்டைலிங் பொருள்களை உபயோகிக்கலாம். மேலும், நீங்கள் பயன்படுத்தும் தயாரிப்புகள் உங்கள் சருமத்தை எரிச்சலூட்டுவதில்லை என்பதை உறுதிசெய்வது மட்டுமே பராமரிப்புக்காக டிப்ஸ்”
உடலில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு செபாசியஸ் சுரப்பிகள் உச்சந்தலையில் உள்ளன
“உங்கள் உச்சந்தலையில் அதிகப்படியான செபாசியஸ் சுரப்பிகள் இருப்பதால், பொடுகை நிர்வகிக்கவும் தடுக்கவும் உங்கள் சீபம் உற்பத்தியை நீங்கள்தான் சரியாக நிர்வகிக்க வேண்டும்” என்று அவர் விளக்கினார்.
பெரும்பாலும் பொடுகு தானாகவே முடி உதிர்தலை ஏற்படுத்தாது
தலையில் பொடுகு உள்ளவர்களுக்கு உச்சந்தலையில் அரிப்பு ஏற்படும். இதனால், தலையில் கைப்படும்போது அது முடிவேர்களை பாதித்து, முடி உதிர்வை ஏற்படுத்துகிறது என்று டாக்டர் அகர்வால் கூறுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil