முடி உதிர்வு பிரச்சனைகளால் பலர் அவதிப்பட்டு வருகிறார்கள். எத்தனையோ சிகிச்சைகள் எடுத்தும் இப்பிரச்சனையை தீர்க்க முடியவில்லை என சிலர் கூறுகின்றனர். எனினும், உணவு முறையில் மாற்றங்கள் ஏற்படுத்துவது மூலம் இப்பிரச்சனையை எப்படி தடுக்கலாம் என பார்ப்போம்.
கறிவேப்பிலை முடியில் பல அதிசயங்களை கொடுக்கக் கூடியது என வல்லுநர்கள் கூறுவார்கள். கறிவேப்பிலைகள் மட்டுமே சாப்பிட்டு முடி வளர்ந்ததாக பலர் தங்கள் அனுபவங்களை கூறுகின்றனர்.
அதன்படி, தினசரி 5 முதல் 10 கறிவேப்பிலைகள் சாப்பிடலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், கறிவேப்பிலையை சாறு எடுத்து அதனை குடிக்க கூடாது எனவும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் அசைவ உணவுகளை சாப்பிட வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேக், பஃப்ஸ் போன்ற பேக்கரி பொருள்கள் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். செயற்கையான குளிர்பானங்கள் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
இந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் முடி உதிர்வு பிரச்சனைகளுக்கு நம்மால் தீர்வு காண முடியும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“