இளம் வயதில் டயட் ஆரோக்கியமானதா?

தினமும் ஒரு மணி நேரம் பயிற்சி மேற்கொண்டால் உடல் இளைப்பதோடு

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் உடனே டயட் இருக்க வேண்டும். இது தான் பலரின் எண்ணம்.[ ஆனால் உண்மையில் டயட் என்பது எந்த அளவிற்கு ஆரோக்கியமானது என்று சிந்தித்தது உண்டா?

பிரபல அமெரிக்கா பல்கலைகழகம் ஒன்று கடந்த 22 ஆண்டுகளாக 70,966 பெண்களிடம் டயட் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் உடல் ஆரோக்கியமாக இருக்க பெண்கள் மேற்கொள்ளும் டயட், கேட்கும் திறனில் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பது தெரியவந்துள்ளது. இனி உணவுக் கட்டுப்பாடு இல்லாமலே உடல் எடையைக் குறைக்க முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

சிலர் ஜிம்மை நோக்கிச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் ஜிம்முக்குப் போனால் மட்டும் போதாது. அதற்கேற்ற உணவுகளையும் மேற்கொள்ள வேண்டும். பெண்கள் இளம் பருவ வயதில் 20% உயரத்தில் 50% எடையிலும் வளர்ச்சியை பெறுகிறார்கள். இந்த அதிவேக வளர்ச்சிக்கு சரியான உணவு முறையை கடைப்பிடிக்க முடியாமல் போவதால் இளம் வயது பெண்கள் இரத்தச்சோகைக்கு ஆளாகிறார்கள் என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்தப் பிரச்னை வராமல் இருக்க தண்ணீர் நிறைய எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். சரியான உணவுப்பழக்கம், சரியான அளவு நீர்ச்சத்துள்ள உணவுகள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு அத்துடன் தினமும் ஒரு மணி நேரம் பயிற்சி மேற்கொண்டால் உடல் இளைப்பதோடு நல்ல ஆரோக்கியமாகவும் இருக்க முடியும். உடல் ஃபிட்டாகவும் இருக்கும். சாப்பாட்டு இடைவேளைகளில் எடுத்துக்கொள்ளும் ஜூஸ் சத்துள்ளதாக இருந்தால் இன்னும் நல்லது”

×Close
×Close